onlne

Tuesday, November 8, 2011

அட்ரீனோ கிராபிக் பிராசஸருடன் புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்

புதிய புதிய மொபைல்களை வழங்குவதைவிட, அந்த புதிய மொபைல்களில் என்ன புதிய தொழில் நுட்பத்தினை வழங்கலாம் என்று யோசித்து செயல்பட்டு வருகிறது மோட்டோரோலா மொபைல். எக்ஸ்டி-319 என்ற மொபைலை அறிமுகப்படுத்தி உள்ளது இந்நிறுவனம். 

ஆன்ட்ராய்டு 2.3.4 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்கும் இந்த மொபைலின் திரை 320 X 480 பிக்ஸல் துல்லியத்தை கொண்டது. 

இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்க 800 எம்எச்இசட் சிங்கிள் கோர் எம்எஸ்எம்7227டி-1 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட் மொபைலில் பிக்சர்ஐடி மற்றும் ரிங்டோன் ஐடி சவுகரியமும் உள்ளது. இதில் உள்ள 0.3 மெகா பிக்ஸல் கொண்ட முகப்புக் கேமராவின் மூலம் வீடியோ சாட் வசதியினைப் பெற முடியும். 

அதோடு இதில் மற்றுமொரு 3 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது. இதனால் ஏராளமாக புகைப்படங்களையும் மற்றும் வீடியோக்களையும் எடுக்கலாம். 

அட்ரினோ 200 கிராஃபிகஸ் பிராசஸர், இதன் சிறப்பு என்று கூறலாம். இது மைக்ரோஎஸ்டி மற்றும் மைக்ரோஎச்எஸ்டி ஸ்லாட்டுகளை கொண்டிருப்பதால் சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ளும் சவுகரியத்தையும் கொண்டது.

இதன் ஸ்டோரேஜ் வசதியினை 32ஜிபி வரை விரிவுபடுத்தலாம். 512எம்பி ரோம் மற்றும் 512எம்பி ரேம் வசதியும் இதில் உள்ளது. 

1 comment:

  1. இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ

    கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.


    **** ஆதாமின்டே மகன் அபு *****


    .

    ReplyDelete

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...