onlne

Thursday, November 3, 2011

சிறுவர்களுக்காக வரும் புதிய மொபைல்போன்: பேஸிக் அறிமுகப்படுத்துகிறது

அட! குழந்தைகளிடம் இருந்து மொபைலை பாதுகாத்துக் கொண்டிருப்பதிலேயே பாதிநேரம் செலவாகிறதா? மொபைலில் உள்ள பேட்டரியை கேம் விளையாடியே தீர்த்துவிடுகிறார்களா? 

இன்றைய விஞ்ஞான உலகில் எத்தனையோ பிரச்சனைக்குத் தீர்வு இருக்கும்பொழுது இது ஒரு பிரச்சனையா!? 

மதி நுட்பம் வாய்ந்த நமது தொழில் நுட்ப நிபுணர்கள் இதற்கு ஒரு அருமையான தீர்வை கண்டுபிடித்திருக்கிறார்கள். இமினி என்ற புதிய மியூசிக் மொபைலை பேசிக் நிறுவனம் அறிமும் செய்திருக்கிறது. இது அடிப்படையில் கொரியன் நாட்டைச் சேர்ந்த நிறுவனம். 

இந்த மொபைல் நவம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும். இந்த இமினி மொபைல் ஒரு மியூசிக் மொபைல்போன். இது குழந்தைகள் இசை கேட்டு மகிழ்வதற்காகவே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 

சிறியவர்களாகிய குழந்தைகளின் பிஞ்சு விரல்களுக்கு ஏற்ற வகையில் இந்த மொபைல் குட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், கைக்கு கச்சிதமாக இருக்கும். கையில் ஒரு கைக்குட்டை வைத்திருப்பதும், இந்த மொபைலை வைத்திருப்பதும் ஒன்றுதான் என்பதை இந்த மொபைலை பயன்படுத்தும் பொழுது தெரியும். 

குழந்தைகளுக்கு மொபைலா? என்ற எண்ணமே தேவையில்லை. அதோடு குழந்தைகள் இசை கேட்பது மனதிற்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும் என்று நிறைய விஞ்ஞான மருத்துவர்களும் கூறியிருப்பதைக் கேட்டிருப்பீர்கள். 

ஆகையினாலே இந்த இமினி மியூசிக் போன் குழந்தைகளுக்கு ஏற்ற பயனைத் தரும். இந்த குட்டி மொபைல் வெறும் 40 கிராம் எடை கொண்டதால் கணம் இருக்காது, எளிதாக கையாளலாம்.

இமினிமொபைலின் திரையை உங்கள் கட்டை விரல் கொண்டு எளிதாக மறைத்துவிட முடியும். அத்தகைய குட்டித் திரையை கொண்டுள்ளது. ஆனால் குழந்தைகளின் கண்களுக்கு இந்த திரை அளவு போதுமானது. 

மியூசிக் வசதி மட்டும்தானா என்று நினைத்துவிடாதீர்கள். இன்னும் பல ஆச்சர்யமூட்டும் அரிய வசதிகள் காத்திருக்கிறது. 

இதில் உள்ள 1ஜிபி மெமரி வசதியின் மூலம் தேவையான பாடல்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அதே சமயம் எப்எம் ரேடியோவில் உள்ள இசையையும் கூடுதலாகக் கேட்டு மகிழ முடியும். 

ஸ்டீரியோ ஹெட்செட், அலாரம், வைப்ரேஷன், ரிங் டோன் போன்ற வசதிளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இதற்கே இப்படி திகைத்துவிட்டால் இன்னும் மீதியையும் கேட்டால் இன்றே இந்த மொபைலை கண்கள் தேட ஆரம்பித்துவிடும். இந்த இமினி மொபைல் டியூவல் சிம் போன் வசதியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இதை கேட்டால் அட! இந்த குட்டி மொபைலுக்குள் சுட்டிகளின் குட்டி உலகமே இயங்குவது புரியும். இ-மெயில், மியூசிக் ப்ளேயர் போன்ற வசதிகளைப் பெற தனிப்பட்ட பட்டன்கள் உள்ளது. இதனால் மிக சுலபமாக இந்த வசதிகளை இயக்க முடியும். 

இமினி 400 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அளவான டாக் டைம் மற்றும் ஸ்டான்பை-டைமை வழங்குகிறது. 

குழந்தைகளின் உலகத்திற்குள் நுழைய புதிய அவதாரம் எடுத்திருக்கும் இந்த இமினி மியூசிக் மொபைல் ரூ.3,400 விலை கொண்டது. இதில் இன்னொரு வெர்ஷனும் உருவாக்கப்பட்டிருக்கிறது அதன் விலை ரூ.3,900. 

வரப்போகும் கிரிஸ்மஸ் பண்டிகைக்கு குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசாக பேஸிக் இமினி மியூசிக் மொபைல்போன் இருக்கும் என்று தோன்றுகிறது.

1 comment:

  1. அன்புடையீர்,

    அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


    //// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////
    .
    இப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவிய / உதவும்
    அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    ஒத்துழைப்புக்கு முன்கூட்டிய‌ ந‌ன்றிக‌ள்.

    ReplyDelete

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...