ஆப்பிள் நிறுவனம் வடிவமைக்கும் அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெறுவது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து வரும் ஆப்பிள் ஐபேட்-3 பற்றிய தகவல்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இன்டெர்நெட்டில் உலவி வருகின்றன.
கடைசியாக ஆப்பிள் ஐபேட்-3 ன் வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்கள் குறித்து சில பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது வெளியாகியுள்ள வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்களை காணலாம்.
1. இரண்டு மாடல்களில் ஐபேட்-3யை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில், ஒன்று 9.7 இஞ்ச் திரை கொண்டதாகவும், மற்றொன்று 7 இஞ்ச் திரையை கொண்டதாகவும் இருக்கும்.
2. இதுவரை இல்லாத வகையில் ஹைடெபினிஷன் மற்றும் கிராபிக்ஸ் வீடியோக்களை சப்போர்ட் செய்யும் அதிக துல்லியம் கொண்ட 'ரெட்டினா' டிஸ்ப்ளேயை கொண்டதாக ஐபேட்-3 வருகிறது.
3. ஆப்பிள் ஐபேட்-3 யில் 4 பிராசஸர்கள் கொண்ட ஏ-6 கோர் பிராசஸர் பொருத்தப்பட இருப்பதாக முன்பு கூறப்பட்டது. இது தற்போதைய ஐபேட்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஏ-5 பிராசஸர்களைவிட 30 சதவீதம் வேகமாகவும், 50 சதவீதம் அளவுக்கு பேட்டரியை மிச்சப்படும் ஆற்றல் கொண்டவையாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது அந்த பிராசஸரை தயாரிக்கும் பணிகள் முழுமை பெறாததால், மற்ற ஐபேட்களில் பொருத்தப்பட்டிருக்கும் 2 பிராசஸர்கள் அடங்கிய ஏ-5 கோர் பிராசஸருடன் ஆப்பிள் ஐபேட்-3 வர இருப்பதாக கூறப்படுகிறது.
4. தற்போதைய ஐபேட்களின் முகப்பில் வீடியோ காலிங் வசதிக்கான விஜிஏ முகப்பு கேமராவும், பின்புறத்தில் 720பிக்ஸல் துல்லியத்தில் வினாடிக்கு 30 பிரேம்களில் வீடியோ எடுக்கும் திறன் கொண்ட கேமராவும் பொருத்தப்பட்டிருந்தது.
ஆனால், ஐபேட் வாடிக்கையாளர்கள் கேமராவின் திறன் பற்றி குறை கூறியது ஆப்பிள் நிறுவனத்தின் காதுக்கும் எட்டியிருக்கிறது. எனவே, ஐபேட்-3 யில் ப்ளாஷ் வசதியுடன் கூடிய ஆற்றல்வாய்ந்த 8 மெகாபிக்ஸல் கேமராவுடன் அறிமுகப்படுத்த உள்ளது ஆப்பிள்.
5. இவை எல்லாவற்றையும் விட ஐபேட்-3 யில் என்எப்சி சிப் பொருத்தப்பட்டு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு போன்று ஐபேட்-3யை பயன்படுத்தி கடைகளில் பொருட்கள் வாங்க முடியும் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
6. ஐபேட்-2 வில் பெரும் குறையாக இருப்பது சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ளும் வகையில் மெமரி கார்டு பொருத்துவதற்கான ஸ்லாட் இல்லாதது. ஆனால், இந்த குறையை ஐபேட்-3 தீர்த்து வைக்கும் என்று தெரிகிறது. ஆம், ஐபேட்-3யில் மைக்ரோஎஸ்டி ஸ்லாட்டுடன் வர இருக்கிறது.
7. ஐபேட்-3 யில் நீடித்த ஆற்றலை வழங்க வல்ல அளவில் மிகசிறிய பேட்டரி பொருத்தப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் அதிக ஆற்றல் கொண்ட இந்த பேட்டரியின் விலை தற்போதைய பேட்டரிகளைவிட 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8. கம்ப்யூட்டர்களில் பயன்படும் நவீன தண்டர்போல்ட் தொழில்நுட்பம் ஐபேட்-3யில் அப்லோடு செய்யப்பட்டு வர இருக்கிறது. இதனால், கேபிள் வழியாக ஹைடெபினிஷன் கொண்ட சினிமாவை வெறும் 30 வினாடிகளுக்குள் ஐபேட் மூலம் பரிமாற்றம் செய்ய முடியும்