நோக்கியாவின் புதிய நோக்கியா 703 ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இணையதளங்களில் பரவலாக வந்து கொண்டிருக்கின்றன. அதன் சிறப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக நோக்கியா 703 பட்ஜட் போனாகவோ அல்லது விலை உயர்ந்த போனாகவோ இல்லாமல் நடுத்தர விலையில் இருக்கும். நோக்கியா 703 நோக்கியாவின் சீ ரே போனைப் போல் 3.9 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது.
இணையதள் தகவல்களின் படி நோக்கியா 7.3 1ஜிபிஹச் ப்ராஸஸரைக் கொண்டிருக்கிறது. மேலும் இது 512எம்பி ராமை கொண்டிருப்பதால் நீண்ட நாள் உழைக்கும். இதன் ஓஎஸ் விண்டோஸ் 7 ஆகும்.
இதன் தொடுதிரை 3.7 இன்ச் டிஸ்ப்ளே ஆகும். மேலும் இதில் ஐபிஎஸ் பேனல் உள்ளது. இதன் திரையில் காட்சிகள் மற்றும் படங்கள் 480X800 ரிசலூசனில் இருக்கும். இதன் எல்சிடி திரையில் விண்டோஸ் அவுட்லுக் மிக தெளிவாக இருக்கும். மேலும் இதன் கேமரா 5 மெகா பிக்ஸல் ஆகும். இதன் மூலம் சிறப்பான படங்களை எடுக்க முடியும். இதில் எடிட்டிங் வசதியும் உள்ளது. மேலும் இந்த கேமராவில் ஆட்டோ போக்கஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் உள்ளதால் தரமான தெளிவான படங்களை சேமிக்க முடியும். மேலும் இந்த கேமரா 720பி ஹச்டி வீடியோவை சப்போர்ட் செய்கிறது.
நோக்கியா 703 8ஜிபி சேமிப்பு வசதியுடன் தனியாக மெமரி கார்டையும் வழங்குகிறது. மேலும் இண்டர்னல் சேமிப்புக்கான போர்டும் இந்த மொபைலில் உள்ளது. தகவல் பரிமாற்றத்துக்காக தரமான வைபை மற்றும் ப்ளூடூத் வசதிகளும் உள்ளன. நெட்வொர்க் தொடர்புக்காக 3ஜி வசதி, பிஜிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில்நுட்பமும் உள்ளன. மேலும் ஜிபிஎஸ் வசதி மற்றும் ஓவிஐ மேப்ஸ் ஆகியவை இந்த மொபைலுக்கு கூடுதல் மதிப்பெண்களை வழங்குகிறது. மேலும் இதில் எளிய ஸின்க்ரோனைஸேஷன் செய்ய மைக்ரோயுஎஸ்பி போர்ட்டும் உள்ளது. இதன் விலையைப் பற்றிய தகவல்கள் இன்னும் வரவில்லையென்றாலும் இது சிறந்த ஒரு போனாக இருக்கும் என நம்பலாம்.
நண்பரே, நல்ல பதிவு, இது போன்று இன்னும் பல பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி நண்பரே வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDelete