ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் மொபைலை வெளியிட உள்ளது வியூவ்சோனிக் நிறுவனம். இந்த மொபைல் மாடலில் 1 ஜிகாஹெர்ட்ஸ் கியூவல்காம் ஸ்னாப்டிராகன் சிங்கிள் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. வேகமாக செயல்படுவற்கு இது உதவுகிறது.
இந்த மாடல் கூகுள் ஆன்ட்ராய்டு வி2.2 பிரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டுள்ளது. இது 4.3 இஞ்ச் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டபிள்யூ மல்டி டச் ஸ்கிரீன் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 800 X 480 பிக்ஸல் கொண்டதாக இருக்கும். இதில் 512 எம்பி ரேம் வசதி உள்ளது.
இதன்மூலம், துல்லியமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்க்க முடியும். இதில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோவை ஆப்பரேட் செய்வது மிகவும் எளிதான ஒன்றாகும். எம்பி 4, எம்பி 3, டபிளயூஎம்ஏ, டபிள்யூஏவி போன்ற மீடியா பார்மெட்களை சப்போர்ட் செய்கிறது.
வியூசோனிக் வி-430 மொபைலில் விஜிஏ செகன்டரி முகப்பு கேமராவும், 5 மெகா பிக்ஸல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இது மிகவும் தெளிவான புகைப்படத்தைக் கொடுக்கிறது. இதன் மூலம் 3 ஜி கம்பாட்டிபிலிட்டி வசதியும் கிடைக்கிறது.
எளிதான முறையில் நெட் வசதியினைப் பெற வைபை, ஜிபிஎஸ், வி2.1 ஏ2டிபி புளூடூத் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் யூஎஸ்பி வசதியினைப்பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் இதில் யூஎஸ்பி வசதி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அனைவரையும் கவரும் வகையில் இதன் விலை இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment