onlne

Friday, September 2, 2011

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத நோக்கியா



சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத குறைந்த கதிர்வீச்சை வெளியிடும் போன்களை நோக்கியா அறிமுகம் செய்துள்ளது.

நோக்கியா-700 மற்றும் நோக்கியா-701 என்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போன்கள் விரைவில் இந்தியாவை வந்தடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், நோக்கியா-700 ஸ்மார்ட்போன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நோக்கியா தெரிவிக்கிறது. மற்றொன்று, நோக்கியா-701 போன் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் சி-7 போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வருகிறது.

நோக்கியா-700 மாடல் 3.2 இஞ்ச் தொடுதிரை கொண்டதாக அமோலெட் மற்றும் என்- ஹைடெபினிஷன் டிஸ்ப்ளேவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது துல்லியமான படங்கள் காட்டுவது மட்டுமின்றி ஹைடெபினிஷன் வீடியோ ப்ளேபேக்கை கொடுப்பதால் புதிய பரவசத்தை ஏற்படுத்தும்.





மேலும், அனிமேஷன் வீடியோ கேம்களை மிக துல்லியமாக காட்டும் தொழில்நுட்பத்தையும் இது கொண்டுள்ளது. அதேவேளை, நோக்கியா-701 போன் 3.5 தொடுதிரையுடன் 700ஐ விட சற்று பெரிதாக இருக்கிறது. இது எல்இடி பேக்லிட் மற்றும் டிஎப்டி தொடுதிரையை கொண்டுள்ளது.

நோக்கியா-700 போனில் 5 மெகாபிக்செல் கேமராவை கொண்டிருக்கிறது. ஆனால், நோக்கியா-701 போன் அதிக ஆற்றல்வாய்ந்த ட்யூவல் ப்ளாஷ் வசதியுடன் 8 மெகாபிக்செல் கேமராவை கொண்டிருக்கிறது. வீடியோ ரெக்கார்டிங், பிக்ஸ்டு ஃபோகஸ் ஆகிய வசதிகளும் இருக்கிறது. நோக்கியா-701 போனில் வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.


இரண்டிலும் 512எம்பி இன்டர்னல் மெமரியை பெற்றுள்ளன. ஆனால், சேமி்ப்பு திறனை அதிகரித்துக்கொள்வதில் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. நோக்கியா-700 போன் 1ஜிபி எக்ஸ்டர்னல் மெமரியையும், நோக்கியா-701 போனில் 8ஜிபி மெமரி திறனையும் பெற்றுள்ளன. ஆனால், இரண்டு போனிலும் 32 ஜிபி வரை மைக்ரோஎஸ்டி ஸ்லாட் மூலம் சேமிப்பு திறனை கூட்டிக்கொள்ளும் வசதி இருக்கிறது.

இரண்டு போன்களிலும் 3ஜி நெட்வொர்க் சப்போர்ட், வைஃபை மற்றும் ப்ளூடூத் தகவல் பரிமாற்றத்திற்கான தொடர்பு வசதிகள் பொதுவானதாக இருக்கிறது. வீடியோ ப்ளேயர், மியூசிக் ப்ளேயர், வீடியோ கேம்ஸ் மற்றும் எப்எம் ரேடியோ ஆகியவை பொதுவான அம்சங்கள்.

நோக்கியா-700 போன் 19 நாள் ஸ்டான்ட்-பை மற்றும் 7 மணிநேர டாக் டைம் வசதியை கொடுக்கும். அதேவேளை, நோக்கியா-701 ஸ்மார்ட்போன் 21 நாட்கள் ஸ்டான்ட்-பை மோடிலும், 17 மணிநேர டாக்டைம் வசதியையும் வழங்கும்.

விலையை பொறுத்தவரை நோக்கியா-700 போன் ரூ.18,000க்கும், நோக்கியா-701 போன் ரூ.20,000க்கும் விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



நன்றி:ஒன் இந்தியா 

No comments:

Post a Comment

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...