4.3 இஞ்ச் திரையுடன் வரும் புதிய ஹைவேரியண்ட் ஸ்மார்ட்போன்
நாளுக்கு நாள் அதிகரிக்கும் மொபைல் போட்டியை சொல்ல வார்த்தைகளே இல்லை. அதே போல் மக்களுக்கு மொபைல் மேல் உள்ள மோகமும் குறையவில்லை.
இதனால் புதிய புதிய நிறுவனங்களும் அதி நுட்ப சேவைகளை வழங்கும் வகையில் மொபைல்களைக் உருவாக்கித் தருகின்றது.
எந்த எந்த வகையில் வாடிக்கையாளர்கள் வேலையை எளிதாக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றார்கள் என்பதையும் புரிந்து கொண்டு, அதற்கேற்ப சவுகரியங்களை அனைத்து நிறுவனங்களும் ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
வின்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் எக்ஸ்பி போன்-2 மொபைலை வெளியிட திட்டமிட்டுள்ளது ஐடிஜி நிறுவனம். இந்த மொபைலுடைய சிறப்பு என்னவென்றால் இது மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்கும் ஸ்மார்ட் மொபைல். இந்த மொபைல் 4.3 இஞ்ச் அகன்ற திரையை கொண்டது.
இது லெட் தொழில் நுட்பத்தையும், தொடுதிரை வசதியையும் சேர்த்துக் கொடுக்கிறது. ஐடிஜி நிறுவனம் எக்ஸ்பி போன்-2 என்ற தனது இரண்டாவது படைப்பை பந்தையத்தில் இறக்க உள்ளது. இந்த மொபைல் மக்களுக்கு பிடிக்கும் லேட்டஸ்டு மாடல் என்று கூறலாம்.
இதன் தனித்துவத்தை வடிவமைப்பிலேயே காட்டிவிடுகிறது இந்த புதிய மொபைல். எக்ஸ்பிபோன்2 மொபைல் 1.6 ஜிஎச்இசட் பிராசஸர் துணை கொண்டது. இந்த பிராசஸர் மூலம், விண்டோஸ் 8 ஓஎஸ் எளிதாக இயங்க முடியும். ஏனென்றால் இதில் அதி நவீன தொழில் நுட்பங்கள் பயண்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் மொபைல் என்றாலே அனைத்து வகையிலும் சவுகரியத்தைக் கொடுக்கும் ஒன்றாக இருக்க வேண்டுமென்று மக்கள் எதிர் பார்க்கிறார்கள். இதை மனதில் கொண்டு டைப் செய்வதில் கூட கியூவர்டி கீப்பேட் வசதியினை அளித்திருக்கிறது இந்நிறுவனம்.
இந்த மொபைல் அதிக மெமரி வசதியைக் கொண்டுள்ளது. இதில் உள்ள மெமரி வசதியை 112 ஜிபி வரை வேண்டுமானலும் விரிவுபடுத்திக் கொள்ளலாம். இன்றைய தேதியில், அசர வைக்கும் மெமரி வசதி கொண்ட ஸ்மார்ட் மொபைல் இதுவே என்று கூறலாம்.
இத்தனை வசதிகளையும் தெரிந்த பின்பு மக்களின் ஆர்வம் பேட்டரியின் தறத்தை நோக்கி செல்லும் என்பதும் புரிகிறது. 13 மணி நேரத்திற்கு குறைவில்லாமல் டாக் டைமை பெற முடியும். இந்த வசதி வாடிக்கையாளர்கள் எதிர் பார்க்கும் ஒரு முக்கிய தேவை. அதோடு 5 நாட்களுக்கு தொடர்ந்து ஸ்மான்-பை டைமும் அளிக்கிறது எக்ஸ்பிபோன்-2 மொபைல்.
இந்த புதிய மொபைலின் பல முக்கிய அம்சங்கள் இன்னும் வெளிடப்படாமல் ரகசியமாகவே உள்ளது. இதன் கேமரா வசதி பற்றி தகவல்களைக் கூட வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது இந்நிறுவனம்.
விண்டோஸ் 8 ஓஎஸ் போன்ற உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட இந்த மொபைல் அனைத்து வசதிகளின் அடிப்படையிலும், சிறப்பான விஷயங்களையே மக்களுக்கு அளிக்கும் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.
தகவலுக்கு நன்றி!
ReplyDelete