
புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்பட்டுத்திக் கொண்டிருக்கிறது சாம்சங் நிறுவனம். இந்த முறை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. சாம்சங் ஃபோகஸ் எஸ் மற்றும் ஃபோகஸ் ஃப்ளாஷ் என்ற பெயரில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த இரண்டு மாடல்களிலுமே வின்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு வின்டோஸ் போன் மேங்கோ என்றும் பெயர் உண்டு. சாம்சங் போக்கஸ் எஸ் மாடலில் 1ஜிஎச்இசட் ஸ்கார்பியன் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஆன்ட்ரோ 200 ஜிபியூ மற்றும் க்யூவல்காம் க்யூஎஸ்டி8250 ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியைப் பெறமுடியும்.
அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் 4 இஞ்ச் திரை வசதி கொண்டுள்ளது. சூப்பர் அமோல்டு மல்டி டச் ஸ்கிரீன் வசதியும் இதில் உள்ளது. சாம்சங் மாடலில் 8 மெகா பிக்ஸல் கொண்ட சிறந்த கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகவும் தெளிவான படத்தைப் பெறமுடியும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. இதில் 3.2 பிக்ஸல் கொண்ட முகப்புக் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.
சாம்சங் ஃபோக்கஸ் ஃப்ளாஷ் மாடலில் 5 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா உள்ளது. ஃபோக்கஸ் எஸ் மாடலை விட ஃபோக்கஸ் ஃப்ளாஷ் மாடலில் உள்ள கேமராவின் பிக்ஸல் குறைவுதான், இருப்பினும் துல்லியமான படங்களை எளிதில் பெற முடியும். இதில் உள்ள 7.5 வின்டோஸ் மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் 1.4 ஜிஎச்இசட் பிராசஸருக்கு சப்போர்ட் கொடுக்கிறது.
இந்த இரண்டு மாடல்களிலுமே ரிமூவபில் பேட்டரிப் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் ச்சேட், ம்யூக், பார்-கோட் ஸ்கேனர், போட்காஸ்ட் ப்ளேயர், வைபை, ஜிபிஎஸ், போன்ற வசதிகளும் இந்த ஹேண்ட்செட்டில் உள்ளன. சாம்சங் ஃபோக்கஸ் எஸ் மாடல் ரூ.25,000 விலைக்கும், ஃபோக்கஸ் ப்ளாஷ் மாடல் ரூ.20,000 விலைக்கும் எதிர் பார்க்கப்படுகிறது.





ஏஸர் லிக்யுட் மினி பெராரி மொபைல்கள் ஒரு வருடத்திற்கு முன்பாக வந்தது. இப்போது பல புதிய தொழில் நுட்பங்களுடன் புதுப் பொலிவுடன் ஏஸர் லிக்யுட் மினி பெராரி என்ற பெயரில் மீண்டும் வருகிறது. ஒரிஜினல் பெராரியாஸ் சான்றிதழ் பெற்ற இந்த புதிய ஏஸர் லிக்யுட் மினி பெராரி மொபைல்கள் இந்தியாவிற்கு விரைவில் வந்துவிடும் என நம்பலாம்.
ஏஸர் லிக்யுட் மினி பெராரியின் எடை 105 கிராம்களாகும். இது சிவப்பு வண்ணத்துடன் பெராரியின் சின்னம் தாங்கி தனது ரசிர்களை அசத்த வருகிறது. பில்ட்-இன் வசதிகளான பெராரியின் ஆட்டோமொபைல் வால்பேப்பர்கள் மற்றும் ஏராளமான படங்கள் மற்றும் பெராரி எந்திரங்களின் ஒலிகள் அகியவை உள்ளன.
அதி விரைவான செயல்பாட்டிற்காக க்வல்காம் ஸ்நாப்ட்ராகன் எம்எஸ்எம்227-1 சிப்செட்டுடன் 600 மெகா ஹர்ட்ஸ் க்லாக் வேகத்தில் இயங்கக்கூடிய எஆர்எம் 11 ப்ராஸஸருடன் வருகிறது. மேலும் அட்ரினோ 200 க்ராபிக்ஸ் அக்ஸிலரேட்டர் இந்த மொபைலுக்கு மேலும் பெருமை சேர்க்கும். இதன் 512 எம்பி ராம் அசைக்க முடியாத உறுதியை இந்த மொபைலுக்குத் தரும்.
இதன் ராம் மற்றும் ப்ராசஸர் அகியவை அப்டேட் செய்யப் படாதவையா இருந்தாலும் இதன் ஆண்டராய்டு 2.3 ஜிஞ்சர்ப்ரீட் ஓஎஸ் மற்ற எல்லா குறைகளையும் மறைத்து விடும். ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் உண்மையாகவே சொத்தக்களாக இருக்கின்றன. அந்த வகையில் இந்த மொபைல் அந்த சொத்துக்களை அள்ளித்தரும் மாயாவியாக இருக்கும் என நம்பலாம்.

ஏஸர் லிக்யுட் மினி பெராரியின் ரியர் கேமரா 5 மெகா பிக்ஸல் ஆகும். ஆனால் இதில் ப்ளாஷ் கிடையாது. மேலும் இதில் 720பி ரிசலூசன் வரை எச்டி வீடியோக்களை ரிக்கார்ட் செய்யும் வீடியோ ரிக்கார்டிங் வசதி இல்லை. ஆனால் தரமான தெளிவாக வீடியோக்களை ரிக்கார்ட் செய்யலாம்.
மேலும் இது நவீன ஏஸர் யுஐ 4.2 கொண்டிருப்பதால் இதன் யூசர் இன்டர்பேஸ் மிக லகுவாக இருக்கும். மினி பெராரியின் திரை பழைய பெராரியின் அளவை விட சிறியதாகும். மினி பெராரியின் ரிசலூசன் 320 x 480 பிக்ஸல்களாகும்.
ஆனால் பிக்ஸிலின் அடர்த்தி 229 பிபிஐ கொண்டுள்ளதால் இதன் டிஸ்ப்ளே மிகத் தரமாக இருக்கும். மேலும் மினி பெராரி மைக்ரோ எஸ்டி கார்டுகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளும். அதாவது இது 8ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டுடன் பெராரியின் ப்ளூடூத் ஹெட்செட்டை வழங்குகிறது.ஆக நிறைந்த சகல அம்சங்களுடன் வரும் இந்த மினி பெராரி மலிவு விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத குறைந்த கதிர்வீச்சை வெளியிடும் போன்களை நோக்கியா அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியா-700 மற்றும் நோக்கியா-701 என்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போன்கள் விரைவில் இந்தியாவை வந்தடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், நோக்கியா-700 ஸ்மார்ட்போன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நோக்கியா தெரிவிக்கிறது. மற்றொன்று, நோக்கியா-701 போன் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் சி-7 போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வருகிறது.
நோக்கியா-700 மாடல் 3.2 இஞ்ச் தொடுதிரை கொண்டதாக அமோலெட் மற்றும் என்- ஹைடெபினிஷன் டிஸ்ப்ளேவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது துல்லியமான படங்கள் காட்டுவது மட்டுமின்றி ஹைடெபினிஷன் வீடியோ ப்ளேபேக்கை கொடுப்பதால் புதிய பரவசத்தை ஏற்படுத்தும்.

மேலும், அனிமேஷன் வீடியோ கேம்களை மிக துல்லியமாக காட்டும் தொழில்நுட்பத்தையும் இது கொண்டுள்ளது. அதேவேளை, நோக்கியா-701 போன் 3.5 தொடுதிரையுடன் 700ஐ விட சற்று பெரிதாக இருக்கிறது. இது எல்இடி பேக்லிட் மற்றும் டிஎப்டி தொடுதிரையை கொண்டுள்ளது.
நோக்கியா-700 போனில் 5 மெகாபிக்செல் கேமராவை கொண்டிருக்கிறது. ஆனால், நோக்கியா-701 போன் அதிக ஆற்றல்வாய்ந்த ட்யூவல் ப்ளாஷ் வசதியுடன் 8 மெகாபிக்செல் கேமராவை கொண்டிருக்கிறது. வீடியோ ரெக்கார்டிங், பிக்ஸ்டு ஃபோகஸ் ஆகிய வசதிகளும் இருக்கிறது. நோக்கியா-701 போனில் வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டிலும் 512எம்பி இன்டர்னல் மெமரியை பெற்றுள்ளன. ஆனால், சேமி்ப்பு திறனை அதிகரித்துக்கொள்வதில் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. நோக்கியா-700 போன் 1ஜிபி எக்ஸ்டர்னல் மெமரியையும், நோக்கியா-701 போனில் 8ஜிபி மெமரி திறனையும் பெற்றுள்ளன. ஆனால், இரண்டு போனிலும் 32 ஜிபி வரை மைக்ரோஎஸ்டி ஸ்லாட் மூலம் சேமிப்பு திறனை கூட்டிக்கொள்ளும் வசதி இருக்கிறது.
இரண்டு போன்களிலும் 3ஜி நெட்வொர்க் சப்போர்ட், வைஃபை மற்றும் ப்ளூடூத் தகவல் பரிமாற்றத்திற்கான தொடர்பு வசதிகள் பொதுவானதாக இருக்கிறது. வீடியோ ப்ளேயர், மியூசிக் ப்ளேயர், வீடியோ கேம்ஸ் மற்றும் எப்எம் ரேடியோ ஆகியவை பொதுவான அம்சங்கள்.
நோக்கியா-700 போன் 19 நாள் ஸ்டான்ட்-பை மற்றும் 7 மணிநேர டாக் டைம் வசதியை கொடுக்கும். அதேவேளை, நோக்கியா-701 ஸ்மார்ட்போன் 21 நாட்கள் ஸ்டான்ட்-பை மோடிலும், 17 மணிநேர டாக்டைம் வசதியையும் வழங்கும்.
விலையை பொறுத்தவரை நோக்கியா-700 போன் ரூ.18,000க்கும், நோக்கியா-701 போன் ரூ.20,000க்கும் விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:ஒன் இந்தியா