ஆன்ட்ராய்டு போன்களை விரும்பி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இப்பொழுது இன்னொரு கூடுதல் வசதியும் கிடைக்க உள்ளது. ஜாம்காஸ்ட் எனும் மியூசிக் ப்ளேயர் சாப்ட்வேர் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு காம்டெக்ஸ் அப்ளிக்கேஷன்.
இதன் மூலம் மியூசிக் அப்ளிக்கேஷன்களை ஆன்ட்ராய்டு 2.1 வெர்ஷன் மொபைல்களில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த வசதி இசை விரும்பிகளுக்கு ஒரு சிறந்த விருந்தாக இருக்கும். ஆன்ட்ராய்டு 2.1+ வெர்ஷன் போன்களில் உள்ள 3ஜி, 4ஜி மற்றும் வைபை வசதியின் மூலம் இந்த மியூசிக் அப்ளிகேஷன்களை எளிதாக டவுன்லோட் செய்ய முடியும்.
சாஃப்ட்வேர் டெவெலப்மென்ட் சொல்யூஷன் நிறுவனத்தின் உயர் அதிகாரியான ஸ்காட் ஸ்ட்ரீக்கர் இந்த மியூசிக் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தினார். இதில் காரில் டாக் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது. இந்த சாஃப்ட்வேரை மிகவும் எளிதாக இணைக்க முடியும்.
இந்த புதிய மியூசிக் ப்ளேயரை http://getjamcast.com என்ற இணையத்தளத்தில் இருந்து மிக எளிதான முறையில் டவுண்லோடு செய்யலாம். இதன் ட்ரையல் வெர்ஷன் சாப்ட்வேரை ரூ.1,000 விலையில் 14 நாட்கள் செல்லுபடியாகத்தக்க வகையில் டவுண்லோடு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
ஆஹா புது தகவலா சூப்பர்
ReplyDelete