டபுள்டைம்என்ற புதிய மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். இதன் புதிய வசதிகள் வாடிக்கையாளர்களின் கண்களை விரிய வைக்கும் அளவு, சிறந்த தொழில் நுட்பங்கள் கொண்டது. டபுள்டைம்என்ற பெயர் இந்த மொபைலுக்கு பொருத்தமானது. ஏனென்றால் இதில் டபுல் சந்தோஷத்தைக் கொடுக்கும் க்ளாம்ஷெல் டியூவல் திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மொபைலில் 3.20 இஞ்ச் கொண்ட திரை ஒன்றும், மற்றொரு 3.02 இஞ்ச் கொண்ட தொடுதிரையும் கொடுக்கப்பட்டுள்ளது. இது 480 X 320 பிக்ஸல் துல்லியத்தையும் கொடுக்கிறது. அதோடு டைப் செய்வதற்கு எளிய வகையில் கியூவர்டிக் கீபேட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த டபுள்டைம்மொபைல் வெர்ஷன் 2.2 கொண்ட, ஆன்ட்ராய்டு 2.2 பிளாட்ஃபார்மில் இயங்குகிறது. 600 எம்எச்இசட் சிங்கில் கோர் பிராசஸர், ஆன்ட்ராய்டு பிளாட்ஃபார்ம் இயங்க உதவுகிறது. இந்த மொபைலில் 3.2 மெகா பிக்ஸல் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
260 எம்பி கொண்ட இன்டர்னல் மெமரி இருப்பதால் தேவையான தகவல்களை இதில் பதிவு செய்து கொள்ள முடியும். மைக்ரோஎஸ்டி மற்றும் மைக்ரோஎஸ்டிஎச்சி எக்ஸ்டர்னல் வசதியும் உள்ளது. இப்படி புதுமையான தொழில் நுட்பம் கொண்ட இந்த சாம்சங் டபுள்டைம்மொபைலின் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment