onlne

Sunday, October 9, 2011

பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு நோக்கியாவின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம்

மலிவான விலையில் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஒரு ஸ்மார்ட்போனைகளை நோக்கியா விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

எஸ்-40 பிளாட்பார்மில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கான தொழில்நுட்ப வசதிகளை நோக்கியா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த வரிசையில் மெல்டெமி என்ற பெயரில் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நோக்கியா உருவாக்கி உள்ளது.

ரூ.5,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்த நோக்கியா திட்டமிட்டு இருக்கிறது. இந்த புதிய மெல்டெமி ஆப்பரேட்டிங் சிஸ்டம் லினக்ஸ் சாப்ட்வேர் ப்ளாட்ஃபார்மில் இயங்கும் வகையில் வடிவைக்கப்பட்டுள்ளது.

நோக்கியாவின் இந்த குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட் மொபைல் சிறந்த விற்பனையைக் கொடுக்கும் என்று எதிர் பார்க்கப்படுவதாக இந்நிறுவனத்தின் உயர் அதிகாரியான மேரி மெக்டோனல் தெரிவித்திருக்கிறார்.

பல்வேறு நிறுவனங்கள் மார்க்கெட்டில் பட்ஜெட் விலை போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருவதால் நோக்கியா போன்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் பட்ஜெட் ஸ்மார்ட்போன் செக்மெண்ட்டில் நெருக்கடியை குறைத்துக்கொள்ள முடியும் என்று நோக்கியா கருதுகிறது.

மெல்டெமி ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட நோக்கியாவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் ரூ.5,000 விலைக்குள் மார்க்கெட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...