onlne

Thursday, October 20, 2011

ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட புதிய சாம்சங் டிரான்ஸ்ஃபிக்ஸ் மொபைல்

டிரான்ஸ்ஃபிக்ஸ் என்ற ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் மொபைலில் சிங்கில் கோர் கியூவல்காம் ஏஆர்எம் 9 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இது 800 மெகாஹெர்ட்ஸ் செயல் வேகம் கொண்டது. இந்த புதிய மொபைல் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர்களுக்கு சப்போர்ட் செய்கிறது. இதில் யூடியூப் ப்ளேயர் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் 3.2 இஞ்ச் திரை வசதி கொண்டது. 320 X 480 பிக்ஸல் திரை வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மெமரி ஸ்டோரேஜ் வசதியை 125 எம்பி வரை வேண்டுமானாலும் விரிவுபடுத்திக் கொள்ளலாம். அதிகமான மெமரி வசதி உள்ளதால் அதிக அளவு தகவல்களையும் பதிவு செய்ய முடியும். இந்த ஸ்மார்ட்மொபைலில் ஜிபிஎஸ் நேவிகேஷன் தொழில் நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. அதோடு இந்த மொபைல் வெறும் 125 கிராம் இலகு எடை கொண்டது.

சாம்சங் டிரான்ஸ்ஃபிக்ஸ் மொபைலில் நெட்வொர்க் வசதிக்காக வைபையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு புளூடூத் மற்றும் யூஎஸ்பி 2.0 போர்ட் வசதியும் உள்ளதால் தகவல் பரிமாற்றமும், தகவல்கள் பதிவேற்றமும் எளிதாக நிகழ்த்தலாம்.அனைவரும் எதிர் பார்க்கின்ற 3ஜி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது வெப் அப்ளிக்கேஷன் கொண்ட ஸ்மார்ட் மொபைலாகும். 1,500 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 3 மணி நேரம் டாக் டைமும், 200 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கிடைக்கிறது. சாம்சங் டிரான்ஸ்பிக்ஸ் மொபைல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும்பொழுது ரூ.9,000 விலையை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

1 comment:

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...