onlne

Wednesday, August 3, 2011

புதிய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் ஸ்மார்ட்போன்கள்



உளக அளவில் விண்டோஸ் போன் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கு கிடைத்த பெரிய வரவேற்பை அடுத்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் போன் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை, தோஷிபா- ஃபியூஜிட்சூ கூட்டு குழுமத்தின் மொபைல்போன் வாயிலாக வரும் செப்டம்பரில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

தோஷிபாவைத் தொடர்ந்து எச்டிசி நிறுவனமும் அடுத்து விண்டோஸ் போன் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இரண்டு போன்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. எச்டிசி இக்னைட் மற்றும் எச்டிசி பிரைம் என்ற பெயர்களில் இந்த போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கினறன.

இரண்டு போன்களும் விண்டோஸ் பட்டன்களை கொண்டிருக்கின்றன. இதனுடைய செயல்பாடுகளை பற்றி இணையதளங்களில் யூக தகவல்கள் உலா வந்தாலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை.

எச்டிசி இக்னைட் தோற்றத்தில் எச்டிசியின் மோஸார்ட் போன்றே 3.7 இன்ச் அளவு கொண்ட டச் ஸ்கிரினுடன் உள்ளது. மேலும் அது 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், 5மெகா பிக்செல் கேமராவையும், 720பி வீடியோ ரிக்கார்டிங் வசதியையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது டச் ஸ்கிரீனோடு தரமான டைப் செய்வதற்கு வசதியாக கீபேடையும் கொண்டிருக்கிறது. மேலும் அது ஹைடெபினிஷனில் வீடியோ ரிக்கார்டிங் வசதியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலின் மற்ற விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. எனினும் இது குறைந்த விலையில் விரைவில் மார்க்கெட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.



Tuesday, August 2, 2011

1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட சூப்பர் பாஸ்ட் பிராசஸருடன் புதிய ஸ்மார்ட்போன்



1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட சூப்பர் பாஸ்ட் பிராசஸருடன் புதிய ஸ்மார்ட்போனை களமிறக்க எச்டிசி ஆயத்தமாகி வருகிறது. இது ஹைஎண்ட் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைக்ரோமேக்ஸ் ஏ70 vs கார்பன் ஏ-1 போன்களின் ஒப்பீடு


பட்ஜெட் விலை கொண்ட ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் உள்நாட்டு நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியால் வெளிநாட்டை சேர்ந்த பல முன்ணனி நிறுவனங்கள் திணறி வருகின்றன. குறைந்த விலையில் தரமிக்க போன்களை அறிமுகப்படுத்தி வருவதால், சந்தையில் ஈடுகொடுக்க முடியாமல் அந்த நிறுவனங்கள் தற்போது விலை குறைப்பை துவங்கியுள்ளன.

Monday, August 1, 2011

புதிய கேலக்ஸி வரிசை சாம்சங் ஸ்மார்ட்போன்


கடந்த சில மாதங்களாக சாம்சங் நிறுவனத்தின் விற்பனை கணிசமாக உயர்ந்து வருவதே இதற்கு காரணம்.மேலும், சமீபத்தில் மார்க்கெட்டை கலக்கிக்கொண்டிருக்கும் கேலக்ஸி வரிசை போன்கள் சாம்சங் விற்பனை உயர்வுக்கு கைகொடுத்து வருகிறது. எனவே, கேலக்ஸி வரிசை போன்களை சாம்சங் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.

அதி நவீன தொழில் நுட்பம்



add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...