பட்ஜெட் விலை கொண்ட ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் உள்நாட்டு நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியால் வெளிநாட்டை சேர்ந்த பல முன்ணனி நிறுவனங்கள் திணறி வருகின்றன. குறைந்த விலையில் தரமிக்க போன்களை அறிமுகப்படுத்தி வருவதால், சந்தையில் ஈடுகொடுக்க முடியாமல் அந்த நிறுவனங்கள் தற்போது விலை குறைப்பை துவங்கியுள்ளன.
இருப்பினும், உள்நாட்டு நிறுவனங்கள் கொடுக்கும் தரம் மற்றும் வசதிகள் அவற்றில் இருக்குமா என்பது சந்தேகமே. இந்த நிலையில்,மார்க்கெட்டில் சக்கை போடு போட்டு வரும் மைக்ரோமேக்ஸ் ஏ-70 மற்றும் விரைவில் கார்பன் மொபைல்ஸ் அறிமுகம் செய்ய இருக்கும் ஏ-1 ஆகிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களின் ஒப்பீட்டை பார்க்கலாம்.
இரண்டு போன்களும் ஆன்ட்ராய்டு 2.2 ப்ரேயோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதில், மைக்ரோமேக்ஸ் ஏ-70 போன் 3.2 இஞ்ச் கொண்டிருக்கிறது. ஆனால், கார்பன்- ஏ1 2.8 இஞ்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இரண்டிலும் அப்ளிகேஷன்களை பார்ப்பதற்கும், இயக்குவதற்கும் எளிதாக இருக்கிறது.
மைக்ரோமேக்ஸ் ஏ-70 போனில் 5 மெகாபிக்செல் கேமராவும், கார்பன் ஏ-1 போனில் 3.2 மெகாபிக்செல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. ஏ-70 போனில் வீடியோ காலிங் வசதிக்கான முகப்பு கேமரா இருக்கிறது. ஆனால், ஏ-1ல் முகப்பு கேமரா இல்லை.
இரண்டிலும் மல்டி பார்மெட் ஆடியோ, வீடியோ ப்ளேபேக் வசதிகள் உண்டு. இரண்டு போன்களிலும் ஸ்பீக்கர்கள் தரமான ஒலியை வழங்குகிறது. 3.5மிமீ ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ உள்ளிட்டவை இரண்டிற்கும் பொதுவாக இருக்கிறது.
3ஜி, வைஃபை. புளூடூத், ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் இணைப்பு வசதிகள் இருக்கிறது. ஆனால், தகவல் பரிமாற்ற வேகத்தில் இரண்டும் ஏமாற்றம் அளிக்கிறது. 3ஜி நெட்வொர்க்கில் இரண்டு போன்களும் 7 எம்பிபிஎஸ் வேகத்தை எட்டுவதற்கு சிரமப்படுகின்றன.
மைக்ரோமேக்ஸ் ஏ-70 போன் ரூ.7,750 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கார்பன் ஏ-1 மாடலின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால், இரண்டில் மைக்ரோமேக்ஸ் ஏ-70 போன் சிறப்பானதாக தோன்றுகிறது.
No comments:
Post a Comment