உளக அளவில் விண்டோஸ் போன் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கு கிடைத்த பெரிய வரவேற்பை அடுத்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் போன் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை, தோஷிபா- ஃபியூஜிட்சூ கூட்டு குழுமத்தின் மொபைல்போன் வாயிலாக வரும் செப்டம்பரில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
தோஷிபாவைத் தொடர்ந்து எச்டிசி நிறுவனமும் அடுத்து விண்டோஸ் போன் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இரண்டு போன்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. எச்டிசி இக்னைட் மற்றும் எச்டிசி பிரைம் என்ற பெயர்களில் இந்த போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கினறன.
இரண்டு போன்களும் விண்டோஸ் பட்டன்களை கொண்டிருக்கின்றன. இதனுடைய செயல்பாடுகளை பற்றி இணையதளங்களில் யூக தகவல்கள் உலா வந்தாலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை.
எச்டிசி இக்னைட் தோற்றத்தில் எச்டிசியின் மோஸார்ட் போன்றே 3.7 இன்ச் அளவு கொண்ட டச் ஸ்கிரினுடன் உள்ளது. மேலும் அது 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், 5மெகா பிக்செல் கேமராவையும், 720பி வீடியோ ரிக்கார்டிங் வசதியையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது டச் ஸ்கிரீனோடு தரமான டைப் செய்வதற்கு வசதியாக கீபேடையும் கொண்டிருக்கிறது. மேலும் அது ஹைடெபினிஷனில் வீடியோ ரிக்கார்டிங் வசதியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலின் மற்ற விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. எனினும் இது குறைந்த விலையில் விரைவில் மார்க்கெட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
புதிய தகவல்...
ReplyDeleteவாழ்த்துக்கள் மற்றும் வாக்குகள்..