கடந்த சில மாதங்களாக சாம்சங் நிறுவனத்தின் விற்பனை கணிசமாக உயர்ந்து வருவதே இதற்கு காரணம்.மேலும், சமீபத்தில் மார்க்கெட்டை கலக்கிக்கொண்டிருக்கும் கேலக்ஸி வரிசை போன்கள் சாம்சங் விற்பனை உயர்வுக்கு கைகொடுத்து வருகிறது. எனவே, கேலக்ஸி வரிசை போன்களை சாம்சங் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்த மாத இறுதிக்குள் புதிய கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போனை சாம்சங் அறிமுகப்படு்த்த இருக்கிறது. கேலக்ஸி எஸ்-2 ஒயிட் என்ற பெயரில் வரும் இந்த போன் உயரிய ரகத்தை சேர்ந்தது.
ஹைடெபினிஷன் வீடியோ மற்றும் படங்களை காட்டும் சூப்பர் அமொலெட் டிஸ்பிளே கொண்ட இதன் தொடுதிரை 4.3 இஞ்ச் கொண்டதாக வருகிறது. ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்பிரெட் 2.3 வெர்ஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதன் மல்டி டாஸ்க்கிங் வேலைகளை பக்காவாக செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டது.
இதன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் மற்றும் 768 எம்பி ரேம் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கு கனக்கச்சிதமாக ஒத்துழைப்பு கொடுக்க வல்லதாக இருக்கும்.எச்-263 மற்றும் எச்-264 ஹைடெபினிஷனில் வீடியோ ப்ளேபேக் மற்றும் ரெக்கார்டிங் வசதியை கொடுக்கும். அனைத்து பார்மெட்டுகள் கொண்ட ஆடியோ பைல்களை இயக்கும் திறனும் கொண்டதாக இருக்கும்.
1080பி வீடியோ ரெக்கார்டிங் செய்யும் ஆற்றல்வாய்ந்த 8மெகாபிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 1.3 மெகாபிக்செல் கொண்ட இதன் முகப்பு கேமரா வீடியோ காலிங் வசதிக்கு உகந்ததாக இருக்கிறது.புளூடூத்,வைஃபை, யுஎஸ்பி மற்றும் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் இணைப்பு வசதிகள் இருக்கிறது. இது 3ஜி நெட்வொர்க்கில் 21எம்பிபிஎஸ் வேகத்தில் தகவல்பரிமாற்றம் செய்யும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்-2 அம்சங்கள்:
4.3 இஞ்ச் அமொலெட் டிஸ்பிளே
1.2 ஜிகா ஹெர்ட்ஸ் பிராசஸர்
ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்பிரெட் ஓஎஸ்
8 மெகாபிக்செல் கேமராட
32ஜிபி வரை சேமிப்பு திறனை அதிகரித்து கொள்ளும் வசதி
மல்டி பார்மெட் மியூசிக் மற்றும் வீடியோ ப்ளேபேக்
ஜாவா சப்போர்ட்
நவீன தொழில்நுட்ப அம்சங்களில் குறைவைக்காமல் வரும் சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஒயிட் ரூ.32,000 விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.
No comments:
Post a Comment