Wednesday, August 31, 2011
Monday, August 29, 2011
விரைவில் கார்பன்னின் பட்ஜெட் போன்கள்
இந்திய மொபைல் நிறுவனமான கார்பன் நிறுவனம், தற்போது தரமான 3ஜி மொபைல்களை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. இதன் தொடர்ச்சியாக டூவல் சிம் வசதியுடன் கேடி-100 மற்றும் கே-1515 என்ற புதிய மொபைல்களை விரைவில் அறிமுகப்படுத்துகிறது.இந்த இரண்டு மொபைல்களும் ஒரே நேரத்தில் வரும் என்று தெரிகிறது. கேடி-100 டிஷ்னி சீரிஸ் மொபைலாகும். ஆனால், கே-1515 ஒரு 3டி மொபைலாகும்.
இரண்டு மொபைல்களுக்கிடையே எராளமான் ஒற்றுமைகளும் வேறுபாடுகளும் உள்ளன. குறிப்பாக கேடி-100 மொபைல், 170 x 220 ரிசலூசன் கொண்ட 2.0 இஞ்ச் டிஎப்டி டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது.
ஆனால் கே-1515 எச்விஜிஏ 3.2 இஞ்ச் தொடுதிரையை கொண்டிருக்கிறது. இவற்றின் மெமரி சேமிப்பைப் பார்த்தால் கே-1515 போன் 1ஜிபி இன்டர்னல் மெமரியுடன், 8ஜிபி எக்ஸ்டர்னல் மெமரியைக் கொண்டுள்ளது. ஆனால் கேடி-100 போன் 16ஜிபி எக்ஸ்டர்னல் மெமரியைக் கொண்டுள்ளது.
கார்பன் கேடி-100ல் டூவல் மெமரி கார்டு வசதி உள்ளது. அதனால் இதில் 16ஜிபி கொண்ட 2 டூவல் மெமரிகார்டுகளை வைத்திருக்க முடியும். மேலும் கேடி-100 இமெயில் சப்போர்ட் மற்றும் ஒபெரா மினி ப்ரவுஸர் போன்றவை கொண்டிருப்பதால் கே-1515ஐ விட கேடி-100 ஒரு படி மேலே இருக்கிறது.
இரண்டு மொபைல்களுமே 6 முதல் 8 மணி நேரம் விடாமல் இயங்கக்கூடிய உயர்திறன் கொண்ட பேட்டரியுடன் 2 மெகா பிக்ஸல் கேமராவையும் கொண்டுள்ளன. மேலும் இரண்டுமே கேமரா, மியூசிக் ப்ளேயர், எப்எம் மற்றும் ப்ளூடூத் வசதியையும் கொண்டுள்ளன.
இந்த இரண்டு மொபைல்களின் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் இவற்றை எவரும் எளிதில் திருடிவிட முடியாது. அவ்வாறு திருடி விட்டால் இவற்றை எளிதில் கண்டுபிடிக்கக் கூடிய அளவிற்கு ட்ராக்கர் தொழில் நுட்பம் உள்ளது.
இந்த இரண்டு போன்களின் ஆதிக்கம் சந்தையில் அதிகம் இருக்கும் என்று இப்போதே தெரிகிறது. டூவல் சிம் வசதி கொண்ட மொபைல் வாங்க வேண்டுமானால் கே-1515யும், டூவல் மெமரி கார்டு வசதி வேண்டுமானால் கேடி-100யும் தேர்ந்தெடுக்கலாம். விலையைப் பார்த்தால் கேடி-100 மொபைல் ரூ. 5,000க்கும், கே-1515 மொபைல் ரூ. 7,500க்கும் கிடைக்கும்.
Sunday, August 28, 2011
அட்டகாசமான அம்சங்களை கொண்ட i -போன் 5 சிறப்பம்சங்கள் video
அட்டகாசமான அம்சங்களை கொண்ட i -போன் 5 சிறப்பம்சங்கள் உங்களுக்காக வீடியோ வாக
Saturday, August 27, 2011
ஆன்லைனில் அலுக்காமல் பாட்டு கேட்க அருமையான போன்: சோனி அறிமுகம் .
டெல்லி: வாக்மேன் தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை வாங்கிய சோனி எரிக்ஸன் தற்போது ஆன்ட்ராய்டில் இயங்கும் வாக்மேன் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.த
சோனி எரிக்ஸன் லைவ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் முழுக்க முழுக்க இசை பிரியர்களை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆம். ஆன்லைனில் இசை கேட்பதற்கு ஏதுவாக பிரத்யேக பட்டனுடன் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த பட்டனை ஒரு முறை அழுத்தினால் போதும். நாம் விரும்பும் இசைதளத்திற்குள் சென்று இசை பைல்களை கட்டி இழத்து வந்துவிடும். அதுமட்டுமல்ல, விருப்பமான பாடல்களை ஃபேஸ்புக் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.
இந்த போன் 3.2 இஞ்ச் கொண்ட இதன் தொடுதிரை மல்டி டச் வசதி கொண்டது. இதன் டிஸ்பிளே 16மில்லியன் கலர்களை பிரித்தறியும் ஆற்றல் கொண்டது.
தவிர, ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வேகத்திற்கு தோள்கொடுக்கும் வகையில் 1ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸருடன் வந்துள்ளது.
இதில், வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகளே சப்போர்ட் செய்யும்.
இது வெறும் 115 கிராம் மட்டுமே எடை கொண்டதாக இருக்கும். இதன் டிஸ்பிளே கீறல்கள் விழாத வகையில் சூழப்பட்ட பிரத்யேக உறையை கொண்டுள்ளது.
320எம்பி இன்டர்னல் சேமிப்பு திறனுடன் 2ஜிபி சேமிப்பு திறன் கொண்ட இ்ந்த போனில் 32ஜிபி வரை சேமிப்பு திறனை அதிகரித்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.
ஆட்டோஃபோகஸ், எல்இடி ப்ளாஷ் மற்றும் போட்டோ எடிட்டிங் வசதிகளுடன் 5 மெகாபிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
ஜியோ டேக்கிங், இமேஜ் மொபிலைசேஷன் உள்ளிட்ட வசதிகளும் இருக்கிறது. க்ரையோசிட்டி மீடியா அப்லோடுன் இந்த போன் வந்துள்ளது. இதன் மூலம், சோனி இணையதள மீடியா சேவை தொகுப்பிலிருந்து வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
ஜிபிஆர்எஸ், எட்ஜ் உள்ளிட்ட தொடர்பு வசதிகளையும் வழங்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை
Wednesday, August 24, 2011
எக்ஸ்பீரியா போனகளுக்கு புதிய வீடியோ சேவை: சோனி எரிக்ஸன் வழங்குகிறது
சோனி எரிக்சன் மொபைல் நிறுவனம் தனது எக்ஸ்பீரியா ஆண்ட்ராய்டு போன்களில் க்யூரியாசிட்டி வீடியோ சேவையை வழங்க திட்டமிட்டிருக்கிறது.வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த புதிய சேவையைத் தொடங்கிவிடுவார்கள் என்று தெரிகிறது. இது உண்மையில் மொபைல் பிரியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை..
ஏற்கனவே சோனி எரிக்சன் நிறுவனம் தமது எக்ஸ்பீரியா ரே மற்றும் எரிக்சன் ஸிபேரியா போன்ற ஆண்ட்ராய்டு மொபைல்களில் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நற்சேவை செய்து வருகிறது.
இப்பொழுது, எக்ஸ்பீரியா மினி மற்றும் எக்ஸ்பீரியா மினி ப்ரோ ஆகிய இரு மொபைல்போன்களிலும் முதற்கட்டமாக இந்த சேவையை பெற முடியும்..
இந்த சேவையினால் என்ன பலன் என்று பலருக்கும் கேள்வி எழலாம். இதனால் பல நன்மைகள் உள்ளன.
க்யுரியோசிட்டி வீடியோ என்பிஸி, பாராமவுண்ட் பிக்ஸர்ஸ், சோனி பிக்ஸர்ஸ் ஹோம் எண்டர்டைன்மென்ட், ட்வெண்டியத் செஞ்சூரி பாக்ஸ் மற்றும் வார்னர் பிரதரிஸ் போன்ற ஸ்டூடியோக்களிடமிருந்து படங்களை பதிவு செய்ய அனுமதிக்கிறது.
இதன்மூலம் டிவி சேவையயும் மொபைலில் வழங்கும். இத்தகைய வசதிகள் இந்த மொபைலில் இருப்பதால் இதன் விலை சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மொபைல்கள் வாடிக்கையாளர்களுக்கு உண்மையாகவே எல்லா வசதிகளையும் வாரி வழங்கும். இவை ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் சிறந்த ரிசலூஷன் கொண்ட கேமராவையும் தரமான வீடியோ ரிக்கார்டிங் வசதியையும் வழங்குகிறது.
மேலும் பேஸ்புக் போன்ற சோஷியல் நெட்வொர்க் வசதிகளை இதில் விரைவாக இயக்க முடியும். இதன் மூலம் நாம் நமது புகைப்பட ஆல்பத்தை நேரடியாக இணைக்க முடியும்.
இதிலுள்ள காலண்டரின் மூலம் நமது பேஸ்புக் நடவடிக்கைகளையும் நமது எதிர்கால நிகழ்வுகளையும் முன்கூட்டியே குறித்து வைக்க முடியும்.
எல்லாவற்றையும் தாண்டி இந்த மொபைல்கள் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கின்றன.
பொதுவான சிறப்பு நிகழ்வுகளில் நாம் கலந்துகொள்ளும் போது இந்த மொபைல்களை நாம் வைத்திருந்தால் கண்டிப்பாக இது நமக்கு கௌரவத்தைக் கொடுக்கும்.
Subscribe to:
Posts (Atom)
















