சோனி எரிக்சன் மொபைல் நிறுவனம் தனது எக்ஸ்பீரியா ஆண்ட்ராய்டு போன்களில் க்யூரியாசிட்டி வீடியோ சேவையை வழங்க திட்டமிட்டிருக்கிறது.
வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த புதிய சேவையைத் தொடங்கிவிடுவார்கள் என்று தெரிகிறது. இது உண்மையில் மொபைல் பிரியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை..
ஏற்கனவே சோனி எரிக்சன் நிறுவனம் தமது எக்ஸ்பீரியா ரே மற்றும் எரிக்சன் ஸிபேரியா போன்ற ஆண்ட்ராய்டு மொபைல்களில் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நற்சேவை செய்து வருகிறது.
இப்பொழுது, எக்ஸ்பீரியா மினி மற்றும் எக்ஸ்பீரியா மினி ப்ரோ ஆகிய இரு மொபைல்போன்களிலும் முதற்கட்டமாக இந்த சேவையை பெற முடியும்..
இந்த சேவையினால் என்ன பலன் என்று பலருக்கும் கேள்வி எழலாம். இதனால் பல நன்மைகள் உள்ளன.
க்யுரியோசிட்டி வீடியோ என்பிஸி, பாராமவுண்ட் பிக்ஸர்ஸ், சோனி பிக்ஸர்ஸ் ஹோம் எண்டர்டைன்மென்ட், ட்வெண்டியத் செஞ்சூரி பாக்ஸ் மற்றும் வார்னர் பிரதரிஸ் போன்ற ஸ்டூடியோக்களிடமிருந்து படங்களை பதிவு செய்ய அனுமதிக்கிறது.
இதன்மூலம் டிவி சேவையயும் மொபைலில் வழங்கும். இத்தகைய வசதிகள் இந்த மொபைலில் இருப்பதால் இதன் விலை சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மொபைல்கள் வாடிக்கையாளர்களுக்கு உண்மையாகவே எல்லா வசதிகளையும் வாரி வழங்கும். இவை ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் சிறந்த ரிசலூஷன் கொண்ட கேமராவையும் தரமான வீடியோ ரிக்கார்டிங் வசதியையும் வழங்குகிறது.
மேலும் பேஸ்புக் போன்ற சோஷியல் நெட்வொர்க் வசதிகளை இதில் விரைவாக இயக்க முடியும். இதன் மூலம் நாம் நமது புகைப்பட ஆல்பத்தை நேரடியாக இணைக்க முடியும்.
இதிலுள்ள காலண்டரின் மூலம் நமது பேஸ்புக் நடவடிக்கைகளையும் நமது எதிர்கால நிகழ்வுகளையும் முன்கூட்டியே குறித்து வைக்க முடியும்.
எல்லாவற்றையும் தாண்டி இந்த மொபைல்கள் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கின்றன.
பொதுவான சிறப்பு நிகழ்வுகளில் நாம் கலந்துகொள்ளும் போது இந்த மொபைல்களை நாம் வைத்திருந்தால் கண்டிப்பாக இது நமக்கு கௌரவத்தைக் கொடுக்கும்.
No comments:
Post a Comment