டெல்லி: வாக்மேன் தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை வாங்கிய சோனி எரிக்ஸன் தற்போது ஆன்ட்ராய்டில் இயங்கும் வாக்மேன் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.த
சோனி எரிக்ஸன் லைவ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் முழுக்க முழுக்க இசை பிரியர்களை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆம். ஆன்லைனில் இசை கேட்பதற்கு ஏதுவாக பிரத்யேக பட்டனுடன் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த பட்டனை ஒரு முறை அழுத்தினால் போதும். நாம் விரும்பும் இசைதளத்திற்குள் சென்று இசை பைல்களை கட்டி இழத்து வந்துவிடும். அதுமட்டுமல்ல, விருப்பமான பாடல்களை ஃபேஸ்புக் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.
இந்த போன் 3.2 இஞ்ச் கொண்ட இதன் தொடுதிரை மல்டி டச் வசதி கொண்டது. இதன் டிஸ்பிளே 16மில்லியன் கலர்களை பிரித்தறியும் ஆற்றல் கொண்டது.
தவிர, ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வேகத்திற்கு தோள்கொடுக்கும் வகையில் 1ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸருடன் வந்துள்ளது.
இதில், வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகளே சப்போர்ட் செய்யும்.
இது வெறும் 115 கிராம் மட்டுமே எடை கொண்டதாக இருக்கும். இதன் டிஸ்பிளே கீறல்கள் விழாத வகையில் சூழப்பட்ட பிரத்யேக உறையை கொண்டுள்ளது.
320எம்பி இன்டர்னல் சேமிப்பு திறனுடன் 2ஜிபி சேமிப்பு திறன் கொண்ட இ்ந்த போனில் 32ஜிபி வரை சேமிப்பு திறனை அதிகரித்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.
ஆட்டோஃபோகஸ், எல்இடி ப்ளாஷ் மற்றும் போட்டோ எடிட்டிங் வசதிகளுடன் 5 மெகாபிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
ஜியோ டேக்கிங், இமேஜ் மொபிலைசேஷன் உள்ளிட்ட வசதிகளும் இருக்கிறது. க்ரையோசிட்டி மீடியா அப்லோடுன் இந்த போன் வந்துள்ளது. இதன் மூலம், சோனி இணையதள மீடியா சேவை தொகுப்பிலிருந்து வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
ஜிபிஆர்எஸ், எட்ஜ் உள்ளிட்ட தொடர்பு வசதிகளையும் வழங்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை
No comments:
Post a Comment