
இந்த இரண்டு மொபைல்களும் ஒரே நேரத்தில் வரும் என்று தெரிகிறது. கேடி-100 டிஷ்னி சீரிஸ் மொபைலாகும். ஆனால், கே-1515 ஒரு 3டி மொபைலாகும்.
இரண்டு மொபைல்களுக்கிடையே எராளமான் ஒற்றுமைகளும் வேறுபாடுகளும் உள்ளன. குறிப்பாக கேடி-100 மொபைல், 170 x 220 ரிசலூசன் கொண்ட 2.0 இஞ்ச் டிஎப்டி டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது.
ஆனால் கே-1515 எச்விஜிஏ 3.2 இஞ்ச் தொடுதிரையை கொண்டிருக்கிறது. இவற்றின் மெமரி சேமிப்பைப் பார்த்தால் கே-1515 போன் 1ஜிபி இன்டர்னல் மெமரியுடன், 8ஜிபி எக்ஸ்டர்னல் மெமரியைக் கொண்டுள்ளது. ஆனால் கேடி-100 போன் 16ஜிபி எக்ஸ்டர்னல் மெமரியைக் கொண்டுள்ளது.
கார்பன் கேடி-100ல் டூவல் மெமரி கார்டு வசதி உள்ளது. அதனால் இதில் 16ஜிபி கொண்ட 2 டூவல் மெமரிகார்டுகளை வைத்திருக்க முடியும். மேலும் கேடி-100 இமெயில் சப்போர்ட் மற்றும் ஒபெரா மினி ப்ரவுஸர் போன்றவை கொண்டிருப்பதால் கே-1515ஐ விட கேடி-100 ஒரு படி மேலே இருக்கிறது.
இரண்டு மொபைல்களுமே 6 முதல் 8 மணி நேரம் விடாமல் இயங்கக்கூடிய உயர்திறன் கொண்ட பேட்டரியுடன் 2 மெகா பிக்ஸல் கேமராவையும் கொண்டுள்ளன. மேலும் இரண்டுமே கேமரா, மியூசிக் ப்ளேயர், எப்எம் மற்றும் ப்ளூடூத் வசதியையும் கொண்டுள்ளன.
இந்த இரண்டு மொபைல்களின் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் இவற்றை எவரும் எளிதில் திருடிவிட முடியாது. அவ்வாறு திருடி விட்டால் இவற்றை எளிதில் கண்டுபிடிக்கக் கூடிய அளவிற்கு ட்ராக்கர் தொழில் நுட்பம் உள்ளது.
இந்த இரண்டு போன்களின் ஆதிக்கம் சந்தையில் அதிகம் இருக்கும் என்று இப்போதே தெரிகிறது. டூவல் சிம் வசதி கொண்ட மொபைல் வாங்க வேண்டுமானால் கே-1515யும், டூவல் மெமரி கார்டு வசதி வேண்டுமானால் கேடி-100யும் தேர்ந்தெடுக்கலாம். விலையைப் பார்த்தால் கேடி-100 மொபைல் ரூ. 5,000க்கும், கே-1515 மொபைல் ரூ. 7,500க்கும் கிடைக்கும்.
பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteஉங்கள் ஹீரோ யார்?
ReplyDeleteWhere is Kamal?
Remove Word Verification.