onlne

Monday, August 8, 2011

சர்வதேச ரோமிங் வசதியுடன் மோட்டோ ஃபோட்டான்



அதிவேக இன்டர்நெட்டுக்கான 4ஜி தொழில்நுட்பம் மற்றும் 1 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல்- கோர் பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனை மோட்டரோலா அறிமுகப்படுததியது

ஸ்பிரின்ட் தொலைதொடர்பு நிறுவனத்துடன் இணந்து சர்வதேச ரோமிங் வசதியுடன் இந்த போனை மோட்டோரோலா சந்தைப்படுத்தியது .

பல நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஃபோட்டான் 4.3 இஞ்ச் கொண்ட அகன்ற தொடுதிரையுடன் கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆற்றல்வாய்ந்த 8 மெகாபிக்செல் கேமராவும், வீடியோ காலிங் செய்யும் வசதிகொண்ட விஜிஏ முகப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

16ஜிபி வசதியான இன்டர்நெல் சேமிப்பு திறன்கொண்ட இந்த போனில் 32 ஜிபி வரை சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ள முடியும். இது ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

இது  4ஜி தொழில்நுட்பம் மூலம் சர்வதேச ரோமிங் வசதியை கொடுக்கிறது. அதிநவீன வை-மேக்ஸ் இணைப்பும் இருக்கிறது. அடிக்கடி பல்வேறு நாடுகளுக்கு செல்பவர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும். அதேவேளையில் எந்தெந்த நாடுகளில் இந்த போன் மூலம் ரோமிங் வசதியை பெற முடியும் என்பது பற்றிய விபரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

. இந்த போனுக்கு அமெரிக்காவில் $199.99 (ரூ.8,900) விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆசிய சந்தையில் ஃபோட்டான் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து இதுவரை மோட்டோரோலா தகவல்கள்  எதையும் வெளியிடவில்லை.






Sunday, August 7, 2011

எக்ஸ்பீரியா ஆர்க் Vs எக்ஸ்பீரியா ரே





சோனி எரிசன் மொபைல்கள்தான் சிறந்தது என்று சிலர் கருதுகின்றனர். அவர்கள் சொல்வதில் மிகவும் உண்மை இருக்கிறது. ஏனெனில் சில நேரங்களில் யாருமே தம்மோடு போட்டி போட முடியாத அளவிற்கு மிக தரமான கேமரா வசதியுடன் கூடிய நல்ல மொபைல்களையும், ஸ்மார்ட் போன்களையும் சந்தையில் அறிமுகப்படுத்துகின்றன. அவற்றில் இரண்டுதான் அவர்கள் இப்பொழுது அறிமுகப்படுத்தியிருக்கிற எக்ஸ்பீரியா ஆர்க் மற்றும் எக்ஸ்பீரியா ரேய்.

இவை இரண்டுமே பார்ப்பதற்கு ஸ்டைலாகவும் மற்றும் எல்லா நவீன வசதிகளையும் கொண்டுள்ளன.

சோனி எரிசன் எக்ஸ்பீரியா ஆர்க் மிகப் பெரிய 4.2 இன்ச் அளவுள்ள தொடுதிரை டிஸ்பிளேயை கொண்டுள்ளது. ஆனால் ரே 3.3 அளவுள்ள தொடுதிரை டிஸ்பிளேயை கொண்டுள்ளது. ஆனால் இரண்டுமே மிகவும் சிறப்பாக உள்ளன. ஆனால் ஆர்க் பெரிய திரையை கொண்டிருப்பதால் தரமான வீடியோ ரிசலூஷனையும் உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கிறது.

பொதுவாக கேமராவைப் பொறுத்த வரை சோனி எரிக்ஸனை எவரும் வீழ்த்த முடியாத அளவிற்கு தரமாக இருக்கும். அதுபோல் இந்த இரண்டு புதிய மொபைல்களிலும் மிகச் சிறந்த கேமரா வசதி உள்ளது. இரண்டுமே 8 மெகா பிகஸல் கேமராவுடன், தரமான வீடியோ ரிக்கார்டிங்குடன் 1080பி வீடியோ ரிசலூசனை பெற்றிருக்கிறது.

இரண்டுமே மற்ற ஸ்மார்ட் போன்களைவிட பொழுதுபோக்கு அம்சங்களான ஆடியோ மற்றும் வீடியோ பைல்களைக் கொண்டுள்ளது. எம்பி3 மற்றும் எம்பி4 போன்ற மியூசிக் பார்மட்களையும் தரமான வீடியோ பார்மட்களையும் கொண்டுள்ளன. ஆர்க் மறறும் ரே எஃப்எம் மற்றும் அட்டகாசமான 3.3எம்எம் யுனிவர்சல் ஜாக்கையும் பெற்றிருக்கின்றன.

மேலும் இவை ஆன்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர்போர்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதால் இதன் செய்திறன் பக்காவாக உள்ளது. மேலும் இவை 32ஜிபி விரிவுபடுத்தக்கூடிய புற மற்றும் அக சேமிப்பு வசதிகளையும் கொண்டிருக்கின்றன. இவை 3ஜி, வைபை மற்றும் ப்ளூடூத் நுட்பங்களையும் பெற்றுள்ளதும் இதனுடைய சிறப்பம்சமாகும்.

இதன் விலை இன்னும் தெரியவில்லை என்றாலும் மார்கட்டில் இதன் போட்டி கடுமையாக இருக்கும் என நம்பலாம்

.



Saturday, August 6, 2011

டெல் ஸ்ட்ரீக்-10 மற்றும் சோனி எஸ்-1 டேப்லெட்டுகள் ஒப்பீடு


 புகழ்பெற்ற சோனி நிறுவனம் சமீபத்தில் எஸ்-1 என்ற குறியீட்டு பெயரில் அறிமுகம் செய்துள்ள டேப்லெட் போனையும், கம்ப்யூட்டர் தயாரிப்பில் பிரபலமான டெல் அறிமுகம் செய்துள்ள ஸ்ட்ரீக்-10 டேப்லெட் போனின் சிறப்பம்சங்களின் ஒப்பீட்டை காணலாம்.


முதலில் டிஸ்பிளே மற்றும் வடிவமைப்பை பார்க்கலாம். டெல் ஸ்ட்ரீக்-10 டேப்லெட் 5 இஞ்ச் எல்சிடி டிஸ்பிளேவுடனும், சோனி எஸ்-1 டேப்லெட் 9.4 இஞ்ச் டிஎப்டி டிஸ்பிளேவுடனும் வந்துள்ளது. இதில், சோனி எஸ்-1 டிஸ்பிளே பெரிதாக இருந்தாலும், எல்சிடி டிஸ்பிளே இல்லாதது பெரிய குறையாக தெரிகிறது.



இரண்டு டேப்லெட் போன்களும் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தை கொண்டது. இதில், டெல் ஸ்ட்ரீக் வி-2.2 ப்ரேயோ வெர்ஷனையும், சோனி எஸ்-1 ஆன்ட்ராய்டு 10.3 ஹனிகோம்ப் இயங்கு தளத்தையும் கொண்டிருக்கிறது. சோனி எஸ்-1 டேப்லெட்டில் என்விடிஐஏ டெக்ரா-250 டியூவல் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. அதே டெல் ஸ்ட்ரீக்-10 போனில் க்யூவல்காம் 1 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்நாப்டிராகன் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதில், சோனி எஸ்-1 விஞ்சுகிறது.


சோனி எஸ்-1 டேப்லெட்டில் சோனி கிரையோசிட்டி பிளாட்பார்ம் இணைந்த மியூசிக் சாப்ட்வேரை கொண்டுள்ளதால் இசை மழையில் உங்களை நனைக்கும். ஆனால், டெல் ஸ்டீரிக் ஆடியோ பார்மெட்டில் சிறப்பாக இயக்கினாலும், சோனி எஸ்-1 அளவுக்கு இல்லை.


மற்ற எந்த டேப்லெட் போன்களிலும் இல்லாத வகையில் ப்ளேஸ்டேஷன்-1 மற்றும் ப்ளேஸ்டேஷன்-2 ஆகிய வசதியை கொண்டிருக்கும் சோனி எஸ்-1ல் வீடியோ கேம்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளதால், வாங்கியவுடனே வீடியோ கேம்களை ஆடலாம்.


புளூடூத், யுஎஸ்பி போர்ட் மற்றும் வைஃபை வசதிகள் இருக்கின்றன. ஒரே நேரத்தில் இரண்டு பக்கங்களை திறக்கும் வசதியும் சோனி எஸ்-1ல் இருக்கிறது. இந்த வசதி டெல் ஸ்ட்ரீக்கில் இல்லை.


டெல் ஸ்டீரீக் டேப்லெட் போன் ரூ.20.250 விலையில் இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகிறது. ஆனால், சோனி எஸ்-1 மார்க்கெட்டில் விற்பனைக்கு வரவில்லை. அதேவேளை இந்த போன் ரூ.27,000 விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல் ஸ்டீரீக் டேப்லெட் போன் :







Friday, August 5, 2011

பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கும் நோக்கியா 702டி






செல்போன் சந்தையில் நோக்கியாவுக்கு முக்கிய இடம் உண்டு. நீண்ட நாட்கள் உழைக்கும் நல்ல செல்போன்களுக்கு பெயர்போனது நோக்கியா நிறுவனம்.

இந்தியாவில் காலடி எடுத்து வைத்தில் இருந்தே இந்தியாவின் நம்பகத்தகுந்த செல்போன் தயாரிப்பாளாராக நோக்கியா உள்ளது. இந்தியாவில் இதுவரை ஏராளமான மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

 இதில் பெரும்பாலான போன்கள் ஸ்மார்ட்போன்களே. அதில் ஒன்று நோக்கியா 702டி. மல்டிமீடியா தொழில்நுட்பம் கொண்ட இந்த புதிய போன் 2.5 இன்ச் ஸ்கிரீன் கொண்டது.

இதில் ஆடியோ மற்றும் வீடியோ வசதிகள் அதுவும் எம்பி3எம்பி4, டபுள்யூஎம்வி போன்ற பல வசதிகள் உள்ளன.

இந்த போனில் புளூடூத், வை-ஃபை, யுஎஸ்பி பிசி சின்க் உள்ளது. இந்த போனில் இன்பில்ட் மெமரி இருக்கின்றபோதிலும் மைக்ரோ எஸ்டி மெமரியை அதிகரித்துக் கொள்ளலாம்.

இதில் சிம்பயான் ஆபரேடிங் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்ட் ஓஸ்-ஐ விட சிம்பயான் ஓஎஸ் தான் இந்த ஸ்மார்ட்போனுக்கு சிறந்தது என்று நோக்கியா கருதுகிறது.

நோக்கியா 702 டி-ன் சிறப்பம்சங்கள் பின் வருமாறு,

சிம்பயான் ஓஎஸ்

2.5 இன்ச் ஸ்கிரீன்

14 எம்பிபிஎஸ் வரை 3ஜி இன்டர்நெட் ஆக்சஸ்

ஜிபிஆர்எஸ் மறுறும் எட்ஜ்

8.0 மெகா பிக்சல் ரியர் கேமரா

வீடியோ பதிவு

வீடியோ காலிங் செய்ய விஜிஏ பிரன்ட் கேமரா

புளூடூத் 3.0

வை-பை

200 எம்பி இன்டர்னல் மெமரி

32 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ளும் வசதி கொண்ட மைக்ரோ எஸ்டி

மியூசிக் பிளேயர்

வீடியோ பிளேயர்

3.5 mm ஆடியோ ஜாக்

ஹிட்டாகும் ஸ்மார்ட்போன்களுக்கு உரிய அனைத்து சிறப்பம்சங்களும் நோக்கியா 702 டி-ல் உள்ளது. இதன் விலை மற்றும் அறிமுகத் தேதி இன்னும் தெரிவிக்கப்படவில்லை.


Thursday, August 4, 2011

சாம்சங் கேலக்ஸி-ஆர் ஸ்மார்ட்போன்:சிறப்பம்சங்கள்


இப்பொழுது அறிமுகப்படுத்தவிருக்கும் கேலக்ஸி-ஆர் ஸ்மார்ட்போன் சாம்சங்கின் சிறந்த போனாக இருக்கும் என நம்பலாம்.இந்த போன் 4.19 இஞ்ச் தெளிவான எல்சிடி தொடுதிரையுடன் வடிவமைக்கப்படுகிறது. சக்தி வாய்ந்த டூவல் கோர் ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸருடன்ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்பிரெட் 2.3.4 வெர்ஷனில் இயங்கும்படி இந்த போன் உருவாக்கப்படுகிறது. எனவே இது எல்லாவிதமான வசதிகளையும் கொண்டிருக்கும் என நம்பலாம்.
இதில்ஆற்றல்வாய்ந்த 5மெகாபிக்செல் கேமராவை கொண்டிருக்கும் என்பதால், 720பி துல்லியத்தில் மிகத் தெளிவான வீடியோ ரிக்கார்டிங் வசதியை தரும். மேலும் இது 1.மெகாபிக்செல் முகப்பு கேமரா 3ஜி நெட்வொர்க்கில் வீடியோ காலிங் வசதியை நாம் அனுபவிக்கலாம்.எம்பி-3,எம்பி-4, ஏவிஐ உள்ளிட்ட அனைத்து பார்மெட் ஆடியோ பைல்களிலும் இசையை கேட்கலாம். எச்-263 மற்றும் எச்-264 வீடியோ பார்மெட்டுகளில் ப்ளேபேக் வசதிகளையும் நாம் அனுபவிக்கலாம்.
மேலும் இது ஸ்டீரியோ எப்எம் ரேடியோ மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் கொண்டு ஸ்பீக்கர்களோடு இணைக்கும் வசதியைக் கொண்டுள்ளது.வைஃபைஎட்ஜ் மற்றும் சிறந்த வேகம் கொண்ட 3ஜி இன்டர்நெட் வசதியையும் கொண்டிருக்கும். மேலும் இதில் ப்ளுடூத் மற்றும் யுஎஸ்பி பிசி சிங்க் கனக்டிவிட்டி வசதியையும் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி-ஆர் சிறப்பு அம்சங்கள்:







• 5 
மெகா ஃபிக்ஸல் கேமரா

• 1
ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்

• 
வைஃபை, 3ஜி மற்றும் ப்ளுடூத்

• 
ஆன்ட்ராய்டு 2.3.4 ஜிஞ்சர்பிரெட் ஓஎஸ்

• 
சேமிப்பு திறனை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை கூட்டிக்கொள்ளும் வசதி

• 
ஜாவா சப்போர்ட்

• 720
பி வீடியோ ரிக்கார்டிங்

• 
மியூசிக் மற்றும் ப்ளேபேக் வசதி
சாம்சங் கேலக்ஸி-ஆரின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த போன் சாம்சங் கேலக்ஸி-எஸ் போனை விட விலை குறைவாக இருக்கும் என நம்பலாம்.





add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...