onlne

Thursday, August 4, 2011

சாம்சங் கேலக்ஸி-ஆர் ஸ்மார்ட்போன்:சிறப்பம்சங்கள்


இப்பொழுது அறிமுகப்படுத்தவிருக்கும் கேலக்ஸி-ஆர் ஸ்மார்ட்போன் சாம்சங்கின் சிறந்த போனாக இருக்கும் என நம்பலாம்.இந்த போன் 4.19 இஞ்ச் தெளிவான எல்சிடி தொடுதிரையுடன் வடிவமைக்கப்படுகிறது. சக்தி வாய்ந்த டூவல் கோர் ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸருடன்ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்பிரெட் 2.3.4 வெர்ஷனில் இயங்கும்படி இந்த போன் உருவாக்கப்படுகிறது. எனவே இது எல்லாவிதமான வசதிகளையும் கொண்டிருக்கும் என நம்பலாம்.
இதில்ஆற்றல்வாய்ந்த 5மெகாபிக்செல் கேமராவை கொண்டிருக்கும் என்பதால், 720பி துல்லியத்தில் மிகத் தெளிவான வீடியோ ரிக்கார்டிங் வசதியை தரும். மேலும் இது 1.மெகாபிக்செல் முகப்பு கேமரா 3ஜி நெட்வொர்க்கில் வீடியோ காலிங் வசதியை நாம் அனுபவிக்கலாம்.எம்பி-3,எம்பி-4, ஏவிஐ உள்ளிட்ட அனைத்து பார்மெட் ஆடியோ பைல்களிலும் இசையை கேட்கலாம். எச்-263 மற்றும் எச்-264 வீடியோ பார்மெட்டுகளில் ப்ளேபேக் வசதிகளையும் நாம் அனுபவிக்கலாம்.
மேலும் இது ஸ்டீரியோ எப்எம் ரேடியோ மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் கொண்டு ஸ்பீக்கர்களோடு இணைக்கும் வசதியைக் கொண்டுள்ளது.வைஃபைஎட்ஜ் மற்றும் சிறந்த வேகம் கொண்ட 3ஜி இன்டர்நெட் வசதியையும் கொண்டிருக்கும். மேலும் இதில் ப்ளுடூத் மற்றும் யுஎஸ்பி பிசி சிங்க் கனக்டிவிட்டி வசதியையும் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி-ஆர் சிறப்பு அம்சங்கள்:







• 5 
மெகா ஃபிக்ஸல் கேமரா

• 1
ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்

• 
வைஃபை, 3ஜி மற்றும் ப்ளுடூத்

• 
ஆன்ட்ராய்டு 2.3.4 ஜிஞ்சர்பிரெட் ஓஎஸ்

• 
சேமிப்பு திறனை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை கூட்டிக்கொள்ளும் வசதி

• 
ஜாவா சப்போர்ட்

• 720
பி வீடியோ ரிக்கார்டிங்

• 
மியூசிக் மற்றும் ப்ளேபேக் வசதி
சாம்சங் கேலக்ஸி-ஆரின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த போன் சாம்சங் கேலக்ஸி-எஸ் போனை விட விலை குறைவாக இருக்கும் என நம்பலாம்.





No comments:

Post a Comment

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...