onlne

Friday, August 5, 2011

பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கும் நோக்கியா 702டி






செல்போன் சந்தையில் நோக்கியாவுக்கு முக்கிய இடம் உண்டு. நீண்ட நாட்கள் உழைக்கும் நல்ல செல்போன்களுக்கு பெயர்போனது நோக்கியா நிறுவனம்.

இந்தியாவில் காலடி எடுத்து வைத்தில் இருந்தே இந்தியாவின் நம்பகத்தகுந்த செல்போன் தயாரிப்பாளாராக நோக்கியா உள்ளது. இந்தியாவில் இதுவரை ஏராளமான மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

 இதில் பெரும்பாலான போன்கள் ஸ்மார்ட்போன்களே. அதில் ஒன்று நோக்கியா 702டி. மல்டிமீடியா தொழில்நுட்பம் கொண்ட இந்த புதிய போன் 2.5 இன்ச் ஸ்கிரீன் கொண்டது.

இதில் ஆடியோ மற்றும் வீடியோ வசதிகள் அதுவும் எம்பி3எம்பி4, டபுள்யூஎம்வி போன்ற பல வசதிகள் உள்ளன.

இந்த போனில் புளூடூத், வை-ஃபை, யுஎஸ்பி பிசி சின்க் உள்ளது. இந்த போனில் இன்பில்ட் மெமரி இருக்கின்றபோதிலும் மைக்ரோ எஸ்டி மெமரியை அதிகரித்துக் கொள்ளலாம்.

இதில் சிம்பயான் ஆபரேடிங் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்ட் ஓஸ்-ஐ விட சிம்பயான் ஓஎஸ் தான் இந்த ஸ்மார்ட்போனுக்கு சிறந்தது என்று நோக்கியா கருதுகிறது.

நோக்கியா 702 டி-ன் சிறப்பம்சங்கள் பின் வருமாறு,

சிம்பயான் ஓஎஸ்

2.5 இன்ச் ஸ்கிரீன்

14 எம்பிபிஎஸ் வரை 3ஜி இன்டர்நெட் ஆக்சஸ்

ஜிபிஆர்எஸ் மறுறும் எட்ஜ்

8.0 மெகா பிக்சல் ரியர் கேமரா

வீடியோ பதிவு

வீடியோ காலிங் செய்ய விஜிஏ பிரன்ட் கேமரா

புளூடூத் 3.0

வை-பை

200 எம்பி இன்டர்னல் மெமரி

32 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ளும் வசதி கொண்ட மைக்ரோ எஸ்டி

மியூசிக் பிளேயர்

வீடியோ பிளேயர்

3.5 mm ஆடியோ ஜாக்

ஹிட்டாகும் ஸ்மார்ட்போன்களுக்கு உரிய அனைத்து சிறப்பம்சங்களும் நோக்கியா 702 டி-ல் உள்ளது. இதன் விலை மற்றும் அறிமுகத் தேதி இன்னும் தெரிவிக்கப்படவில்லை.


2 comments:

  1. நோக்கியா ஒரு காலி பெருங்காய டப்பா. மூன்றே வருடங்களில், முதல் இடத்திலிருந்து, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. இனிமேல் மைக்ரோசாப்ட் தொழில் நுட்பத்தை தான் உபயோகிக்கப்போகிறோம் என்று அவர்கள் சொன்னதற்கு பிறகு சிம்பியன் ஒ ஸ் உள்ள ஸ்மார்ட் போன் யாராவது வாங்குவார்களா? இல்லை வாங்குவதில் தான் ஏதாவது பொருள் உண்டா?

    ReplyDelete
  2. பந்து சார் முதன் முதலா என்ன மொபைல் வாங்கினீங்க ?காலி பெருங்காய டப்பாதனே!

    ReplyDelete

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...