onlne

Sunday, August 7, 2011

எக்ஸ்பீரியா ஆர்க் Vs எக்ஸ்பீரியா ரே





சோனி எரிசன் மொபைல்கள்தான் சிறந்தது என்று சிலர் கருதுகின்றனர். அவர்கள் சொல்வதில் மிகவும் உண்மை இருக்கிறது. ஏனெனில் சில நேரங்களில் யாருமே தம்மோடு போட்டி போட முடியாத அளவிற்கு மிக தரமான கேமரா வசதியுடன் கூடிய நல்ல மொபைல்களையும், ஸ்மார்ட் போன்களையும் சந்தையில் அறிமுகப்படுத்துகின்றன. அவற்றில் இரண்டுதான் அவர்கள் இப்பொழுது அறிமுகப்படுத்தியிருக்கிற எக்ஸ்பீரியா ஆர்க் மற்றும் எக்ஸ்பீரியா ரேய்.

இவை இரண்டுமே பார்ப்பதற்கு ஸ்டைலாகவும் மற்றும் எல்லா நவீன வசதிகளையும் கொண்டுள்ளன.

சோனி எரிசன் எக்ஸ்பீரியா ஆர்க் மிகப் பெரிய 4.2 இன்ச் அளவுள்ள தொடுதிரை டிஸ்பிளேயை கொண்டுள்ளது. ஆனால் ரே 3.3 அளவுள்ள தொடுதிரை டிஸ்பிளேயை கொண்டுள்ளது. ஆனால் இரண்டுமே மிகவும் சிறப்பாக உள்ளன. ஆனால் ஆர்க் பெரிய திரையை கொண்டிருப்பதால் தரமான வீடியோ ரிசலூஷனையும் உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கிறது.

பொதுவாக கேமராவைப் பொறுத்த வரை சோனி எரிக்ஸனை எவரும் வீழ்த்த முடியாத அளவிற்கு தரமாக இருக்கும். அதுபோல் இந்த இரண்டு புதிய மொபைல்களிலும் மிகச் சிறந்த கேமரா வசதி உள்ளது. இரண்டுமே 8 மெகா பிகஸல் கேமராவுடன், தரமான வீடியோ ரிக்கார்டிங்குடன் 1080பி வீடியோ ரிசலூசனை பெற்றிருக்கிறது.

இரண்டுமே மற்ற ஸ்மார்ட் போன்களைவிட பொழுதுபோக்கு அம்சங்களான ஆடியோ மற்றும் வீடியோ பைல்களைக் கொண்டுள்ளது. எம்பி3 மற்றும் எம்பி4 போன்ற மியூசிக் பார்மட்களையும் தரமான வீடியோ பார்மட்களையும் கொண்டுள்ளன. ஆர்க் மறறும் ரே எஃப்எம் மற்றும் அட்டகாசமான 3.3எம்எம் யுனிவர்சல் ஜாக்கையும் பெற்றிருக்கின்றன.

மேலும் இவை ஆன்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர்போர்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதால் இதன் செய்திறன் பக்காவாக உள்ளது. மேலும் இவை 32ஜிபி விரிவுபடுத்தக்கூடிய புற மற்றும் அக சேமிப்பு வசதிகளையும் கொண்டிருக்கின்றன. இவை 3ஜி, வைபை மற்றும் ப்ளூடூத் நுட்பங்களையும் பெற்றுள்ளதும் இதனுடைய சிறப்பம்சமாகும்.

இதன் விலை இன்னும் தெரியவில்லை என்றாலும் மார்கட்டில் இதன் போட்டி கடுமையாக இருக்கும் என நம்பலாம்

.



1 comment:

  1. Hi,

    I have sony ericsson Xperia 10. The problem in that mobile is, incoming sound reception is not that much clear. You won't hear the stuff properly when you get incoming calls.

    Sakthi
    http://www.ottran.com

    ReplyDelete

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...