அதிவேக இன்டர்நெட்டுக்கான 4ஜி தொழில்நுட்பம் மற்றும் 1 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல்- கோர் பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனை மோட்டரோலா அறிமுகப்படுததியது
ஸ்பிரின்ட் தொலைதொடர்பு நிறுவனத்துடன் இணந்து சர்வதேச ரோமிங் வசதியுடன் இந்த போனை மோட்டோரோலா சந்தைப்படுத்தியது .
பல நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஃபோட்டான் 4.3 இஞ்ச் கொண்ட அகன்ற தொடுதிரையுடன் கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆற்றல்வாய்ந்த 8 மெகாபிக்செல் கேமராவும், வீடியோ காலிங் செய்யும் வசதிகொண்ட விஜிஏ முகப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.
16ஜிபி வசதியான இன்டர்நெல் சேமிப்பு திறன்கொண்ட இந்த போனில் 32 ஜிபி வரை சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ள முடியும். இது ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.
இது 4ஜி தொழில்நுட்பம் மூலம் சர்வதேச ரோமிங் வசதியை கொடுக்கிறது. அதிநவீன வை-மேக்ஸ் இணைப்பும் இருக்கிறது. அடிக்கடி பல்வேறு நாடுகளுக்கு செல்பவர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும். அதேவேளையில் எந்தெந்த நாடுகளில் இந்த போன் மூலம் ரோமிங் வசதியை பெற முடியும் என்பது பற்றிய விபரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
. இந்த போனுக்கு அமெரிக்காவில் $199.99 (ரூ.8,900) விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆசிய சந்தையில் ஃபோட்டான் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து இதுவரை மோட்டோரோலா தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.
No comments:
Post a Comment