புகழ்பெற்ற சோனி நிறுவனம் சமீபத்தில் எஸ்-1 என்ற குறியீட்டு பெயரில் அறிமுகம் செய்துள்ள டேப்லெட் போனையும், கம்ப்யூட்டர் தயாரிப்பில் பிரபலமான டெல் அறிமுகம் செய்துள்ள ஸ்ட்ரீக்-10 டேப்லெட் போனின் சிறப்பம்சங்களின் ஒப்பீட்டை காணலாம்.
முதலில் டிஸ்பிளே மற்றும் வடிவமைப்பை பார்க்கலாம். டெல் ஸ்ட்ரீக்-10 டேப்லெட் 5 இஞ்ச் எல்சிடி டிஸ்பிளேவுடனும், சோனி எஸ்-1 டேப்லெட் 9.4 இஞ்ச் டிஎப்டி டிஸ்பிளேவுடனும் வந்துள்ளது. இதில், சோனி எஸ்-1 டிஸ்பிளே பெரிதாக இருந்தாலும், எல்சிடி டிஸ்பிளே இல்லாதது பெரிய குறையாக தெரிகிறது.
இரண்டு டேப்லெட் போன்களும் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தை கொண்டது. இதில், டெல் ஸ்ட்ரீக் வி-2.2 ப்ரேயோ வெர்ஷனையும், சோனி எஸ்-1 ஆன்ட்ராய்டு 10.3 ஹனிகோம்ப் இயங்கு தளத்தையும் கொண்டிருக்கிறது. சோனி எஸ்-1 டேப்லெட்டில் என்விடிஐஏ டெக்ரா-250 டியூவல் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. அதே டெல் ஸ்ட்ரீக்-10 போனில் க்யூவல்காம் 1 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்நாப்டிராகன் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதில், சோனி எஸ்-1 விஞ்சுகிறது.
சோனி எஸ்-1 டேப்லெட்டில் சோனி கிரையோசிட்டி பிளாட்பார்ம் இணைந்த மியூசிக் சாப்ட்வேரை கொண்டுள்ளதால் இசை மழையில் உங்களை நனைக்கும். ஆனால், டெல் ஸ்டீரிக் ஆடியோ பார்மெட்டில் சிறப்பாக இயக்கினாலும், சோனி எஸ்-1 அளவுக்கு இல்லை.
மற்ற எந்த டேப்லெட் போன்களிலும் இல்லாத வகையில் ப்ளேஸ்டேஷன்-1 மற்றும் ப்ளேஸ்டேஷன்-2 ஆகிய வசதியை கொண்டிருக்கும் சோனி எஸ்-1ல் வீடியோ கேம்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளதால், வாங்கியவுடனே வீடியோ கேம்களை ஆடலாம்.
Thanks for sharing..
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDelete