அதிக டாக்டைமுடன் ஆற்றல்வாய்ந்த பேட்டரி கொண்ட போன்களை 'பிக் பேட்டரி'என்ற பெயரில் மேக்ஸ் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. மேக்ஸ் ஹெக்ஸா (எம்எக்ஸ் 155), மேக்ஸ் ரேவ் (எம்எக்ஸ் 182) மற்றும் மேக்ஸ் பஸ் (எம்எக்ஸ்-188) ஆகிய மூன்று போன்கள் இந்த வரிசையில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக பிக் பேட்டரி வரிசையில் மேலும் ஒரு புதிய போனை மேக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. சூப்பர் எம்எக்ஸ்- 424 என்ற குறியீட்டு பெயரில் வந்துள்ள இந்த போன் 2.4 இஞ்ச் டிஎப்டி ஸ்கிரீனுடன் டியூவல் சிம் பொருத்தும் வசதியுடையது.
எல்இடி ப்ளாஷ் கொண்ட 1.3 மெகாபிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 3ஜிபிபி, ஏவிஐ, எம்பி-4 பார்மெட்டுகளில் ஆடியோ பைல்களை இயக்கி இசையை ரசிக்கலாம். வயர்லெஸ் எப்எம், சவுண்ட் ரெக்கார்டர் அம்சங்கள் கொண்ட இந்த போனில் ஆடியோ ப்ளேயர் மற்றும் கேமராவை நேரடியாக இயக்குவதற்கு ஏற்ற வகையில் தனித்தனி பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த போனில் பொருத்தப்பட்டுள்ள 220 எம்ஏஎச் பேட்டரி மிகவும் ஆற்றல்வாய்ந்ததாக இருக்கிறது. இது 11 முதல் 17 மணிநேர டாக்டைமை கொடுக்கிறது. இந்த போன் 460 முதல் 1150 மணிநேரம் வரை ஸ்டான்ட்-பை மோடிலும் இருந்து வியப்பில் ஆழ்த்துகிறது.
இந்த போனுக்கு மேக்ஸ் மொபைல்ஸ் நிறுவனம் ரூ.2,727 விலையாக நிர்ணயித்துள்ளது.
No comments:
Post a Comment