மொபைல்போன் மார்க்கெட்டில் புதிய நிறுவனங்களின் வரவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உள்நாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் மொபைல்போன் தயாரிப்பில் இறங்கி வருவது ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், வாடிக்கையாளர்கள் அதிக வசதிகள் மற்றும் தரமான போன்களை குறைந்த விலையில் வாங்குவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. மேலும், மார்க்கெட் போட்டி காரணமாக கவர்ச்சிகரமான அம்சங்கள் கொண்ட புதிய தொழில்நுட்பத்துடன் மொபைல்போன்கள் அறிமுகமாகி வருகின்றன.
இந்த நிலையில்,மொபைல்போன் தயாரிப்பில் சமீபத்தில் கால் பதித்த மும்பையை சேர்ந்த எக்ஸ்ஏஜ் மொபைல்ஸ் நிறுவனம், டியூவல் சிம் பொருத்தும் வசதி கொண்ட முதல் டச் ஸ்கிரீன் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
வட இந்தியாவில் வலுவாக கால் ஊன்றிவிட்ட இந்த நிறுவனம் தற்போது இந்த போனுடன் தென்னிந்திய மார்க்கெட்டிலும் கிளைபரப்புகிறது.
எக்ஸ்ஏஜ் எம்டி-711 என்ற குறியீட்டு பெயரில் வந்துள்ள இந்த போன் 3.2 இஞ்ச் டச் ஸ்கிரீன் கொண்டது. இந்த போனை பார்த்தவுடன் நோக்கியா 5800 எக்ஸ்பிரஸ் மியூசிக் போன் மாடலோ என்று நினைக்க தூண்டுகிறது.
அதிக தரத்தில் புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்ட 3.2 மெகாபிக்செல் கேமராவுடன் வந்துள்ளது. வீடியோ ரெக்கார்டிங் வசதியையும் கொடுக்கிறது.
புரோப்பரீட்டரி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டுள்ள இந்த போன் அப்ளிகேஷன்களை இயக்குவதற்கு எளிதான, இனிமையான அனுபவத்தை கொடுக்கிறது.
அனைத்து பார்மெட்டுகளை கொண்ட ஆடியோ, வீடியோ பைல்களை இதில் இயக்கலாம். எப்எம் ரேடியோ, 3.5 மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக் உள்ளிட்ட வசதிகள் இதற்கு சிறப்பு சேர்க்கிறது.
புளூடூத், ஜிபிஆர்எஸ், வாப் இணைப்புகளில் இன்டர்நெட் போன்ற தகவல்பரிமாற்ற இணைப்பு வசதிகளும் இருக்கிறது. 5 மணிநேர டாக்டைம் கொண்ட பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது.
எக்ஸ்ஏஜ் எம்டி-711 சிறப்பம்சங்கள்:
தொடுதிரை
டியூவல் சிம் கார்டு வசதி
3.2 மெகாபிக்செல் கேமரா
ஜாவா
வீடியோ கேம்ஸ்
புளூடூத்
சேமிப்பு திறனை 8ஜிபி வரை கூட்டும் வசதி
அழைப்புகளை ரெக்கார்டிங் செய்யும் வசதி
குறிப்பிடத்தக்க அம்சங்களை கொண்டுள்ள இந்த போனுக்கு ரூ.5,799 விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment