onlne

Friday, July 29, 2011

புதிய விண்டோஸ் மேங்கோவுடன் ஸ்லிம் போன்: தோஸிபா





ஆன்ட்ராய்டு போன் மார்க்கெட்டை உடைக்க மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் படாதபாடுபட்டு வருகின்றன. ஆன்ட்ராய்டு ஓஎஸ்க்கு கடும் சவாலை கொடுக்கும் வகையில் புதிய ஓஎஸ் ஒன்றை அறிமுகப்படுத்துவதில் இரு நிறுவனங்களும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருகின்றன.

இந்த நிலையில், ஒருவழியாக ஆன்ட்ராய்டுக்கு கடும் போட்டியை ஏற்படு்த்தும் வகையில் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் உருவாக்கியுள்ளது. விண்டோஸ் போன் 7(மேங்கோ) என்ற பெயரில் இந்த போன் வர இருக்கிறது.

நோக்கியா, சாம்சங், எச்டிசி, மோட்டோரோலா ஆகிய நிறுவனங்கள் விண்டோஸ் போன் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் போனை வடிவமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன.

ஆனால், அதற்குள் விண்டோஸ் போன் 7 ஓஎஸ் கொண்ட போனை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக மின்னணு சாதன தயாரிப்பில் புகழ்வாய்ந்த தோஸிபா அறிவித்துள்ளது.

தோஸிபா ஐஎஸ்-12டி என்ற குறியீட்டு பெயரில் வர இருக்கும் இந்த போன் விண்டோஸ் போன் 7 ஓஎஸ் கொண்ட முதல் போன் என்ற பெருமையை பெற இருக்கிறது.

தண்ணீர் புகாதவாறு வாட்டர் புரூப் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போன் வெறும் 10.6 மிமீ தடிமன் கொண்ட ஸ்லிம் போனாக வர இருக்கிறது. முதலில் ஜப்பான் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் இந்த போன் விரைவில் சர்வதேச சந்தையிலும் அறிமுகப்படுத்த தோஸிபா திட்டமிட்டுள்ளது.

3.7 இஞ்ச் தொடுதிரை கொண்ட இந்த போனில் க்யூவல்காம் எம்எஸ்எம்-8655 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. விண்டோஸ் போன் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இயங்க செய்வதற்கு ஏற்ற வகையில் சேமிப்பு திறனை கொண்ட ரேம் பொருத்தப்பட்டுள்ளது. 1080பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் செய்யும் ஆற்றல்வாய்ந்த 13.2 மெகாபிக்செல் கேமராவையும் கொண்டிருக்கும்.

டாப் கிளாஸ் மல்டிமீடியா அம்சங்கள் மற்றும் இணைப்பு வசதிகளுடன் மார்க்கெட்டில் நுழைய இருக்கும் இந்த போன் விண்டோஸ் போன் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் முறைப்படி அறிமுகம் செய்தவுடன் வரும் செப்டம்பர் மாதம் ஜப்பானிலும், அதைத்தொடர்ந்து சர்வதேச மார்க்கெட்டிலும் இந்த போன் அடியெடுத்து வைக்க இருக்கிறது.

இந்த உயரிய ரக ஸ்மார்ட்போன் விலை உள்ளிட்ட இதர விபரங்களை தோஸிபா வெளியிடவில்லை.

No comments:

Post a Comment

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...