onlne

Tuesday, July 26, 2011

இன்டெக்ஸ் புரொஜெக்டர் போன்(ஐஎன் 8810 வி-ஷோ)



 புதிய தலைமுறை அம்சத்துடன் இன்டெக்ஸ் அறிமுகப்படுத்திய போன்தான் ஐஎன் 8810 வி-ஷோ

ஆம், புரொஜெக்டர் மற்றும் டியூவல் சிம் ஆகிய தொழில்நுட்ப அம்சங்களை விஷோ பெற்றுள்ளது. இந்த போனில் உள்ள புரொஜெக்டரை பயன்படுத்தி திரையில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்க முடியும். இது ஒரு புதிய அனுபவத்தை தரும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. இதற்காக, பிரத்யேக பட்டனும் இருக்கிறது.
போன் வைக்கப்பட்டிருக்கும் 8 அடி தூரத்திலிருந்து திரையை வைத்தால் 80 செமீ அளவிற்கு பெரிதுப்படுத்திய வீடியோ மற்றும் புகைப்படங்களை திரையில் பார்க்க முடியும.

3.2 இஞ்ச் டிஎப்டி டச் ஸ்கிரீன் இந்த போனின் பலத்தை கூட்டுகிறது. ஆனால், எடைதான் சற்று அதிகமாக உள்ளது. இந்த போன் 145 கிராம் எடை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், பாக்கெட்டில் வைத்தால் சற்று கனமாக தெரிகிறது.


3.2 மெகாபிக்செல் திறன் கொண்ட கேமரா மூலம் துல்லியமான படங்களை பெற முடிகிறது. இதிலுள்ள இரண்டு போர்ட்களிலும் கூடுதலாக 16 ஜிபி வரை சேமிப்பு திறனை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

ஆடியோ பிளேயர், வீடியோ பிளேபேக் வசதிகளை கொடுக்கிறது. 1230 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 6.5 மணிநேர டாக்டைமை கொடுக்கிறது. இந்த போன் ரூ.8,400 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



No comments:

Post a Comment

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...