இரண்டு சிம் கார்டு கொண்ட போன்களுக்கு மார்க்கெட்டில் ஏற்பட்ட அமோக வரவேற்பை தொடர்ந்து, மூன்று சிம் கார்டுகள், நான்கு சிம் கார்டுகள் பொருத்தும் வசதிகொண்ட போன்கள் அறிமுகமாக துவங்கியுள்ளன.ஆனால், அவற்றில் இரண்டு ஜிஎஸ்எம் சிம் கார்டுகளை மட்டுமே பொருத்த முடியும். மற்ற சிம் கார்டுகள் சிடிஎம்ஏ என்று கூறப்படும் இன்பில்ட் சிம் கார்டுகளாக இருக்கும்.இந்த நிலையில், மூன்று ஜிஎஸ்எம் சிம் கார்டுகள் பொருத்தும் வசதிகொண்ட இந்தியாவின் முதல் போனை ஸென் மொபைல்ஸ் அறிமுகம் செய்துள்ளது.இது ஒரே நேரத்தில் மூன்றுவிதமான நெட்வோர்க்குகளில் ஸ்டான்ட்-பை மோடில் இயங்கும் என்பது விஷேசம்.
இது இரண்டு சிம் கார்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.ஸென் எம்-111 என்ற குறியீட்டு பெயரில் விற்பனைக்கு வந்துள்ள இந்த மொபைல்போன் 2.4 இஞ்ச் டச்ஸ்கிரீன் கொண்டதாக இருக்கிறது. இது கேண்டி பார் வடிவமைப்புடன் களமிறக்கப்பட்டுள்ளது.6 பேண்ட் ஈக்குலைசருடன் கூடிய மியூசிக் பிளேயர்,,எப்எம் ரேடியோ மற்றும் 3.5மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக் உள்ளிட்டவை இருக்கிறது.புளூடூத், கம்ப்யூட்டருடன் இணைத்துக்கொள்வதற்கான யுஎஸ்பி பிசி கனெக்ட்டிவிட்டி ஆகிய வசதிகளையும் ஸென் எம்-111 கொடுக்கிறது.
போதுமான சேமிப்பு திறனை கொண்டுள்ள இந்த போனில் கூடுதல் சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ளும் வசதியும் அதிக பேக்கப்பை கொண்ட பேட்டரியுடன் வந்துள்ளது இந்த ஸென் போன்.
ஸென் எம்-111 குறிப்பிடத்தக்க அம்சங்கள்:
1.3மெகாபிக்செல் கேமரா
மியூசிக் ப்ளேயர்
எம்எம் ரேடியோ
ஜாவா
ஜிபிஆர்எஸ்
புளூடூத்
மூன்று ஜிஎஸ்எம் சிம் கார்டுகளை பொருத்திக்கொள்ளும் வசதிகொண்ட இந்த மொபைல்போன் கவர்ச்சிகரமான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸென் எம்-111 போன் ரூ.3,499 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
No comments:
Post a Comment