onlne

Monday, July 25, 2011

அதிவேக இன்டர்நெட்டுக்கான 4ஜி தொழில்நுட்பம்

அதிவேக இன்டர்நெட்டுக்கான 4ஜி தொழில்நுட்பம் மற்றும் 1 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல்- கோர் பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனை மோட்டரோலா விரைவில் அறிமுகப்படுத்துகிறது.
கடந்த ஜூனில் அறிமுகப்படுத்த நாள் குறிக்கப்பட்டிருந்த இந்த போன் சிறிது தாமதமாக, வரும் 31ந் தேதி அமெரிக்க சந்தையில் முதலாவதாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஸ்பிரின்ட் தொலைதொடர்பு நிறுவனத்துடன் இணந்து சர்வதேச ரோமிங் வசதியுன் இந்த போனை மோட்டோரோலா சந்தைப்படுத்துகிறது.

பல நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஃபோட்டான் 4.3 இஞ்ச் கொண்ட அகன்ற தொடுதிரையுடன் கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆற்றல்வாய்ந்த 8 மெகாபிக்செல் கேமராவும், வீடியோ காலிங் செய்யும் வசதிகொண்ட விஜிஏ முகப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

16ஜிபி வசதியான இன்டர்நெல் சேமிப்பு திறன்கொண்ட இந்த போனில் 32 ஜிபி வரை சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ள முடியும். இது ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

இதன் 4ஜி தொழில்நுட்பம் மூலம் சர்வதேச ரோமிங் வசதியை கொடுக்கிறது. அதிநவீன வை-மேக்ஸ் இணைப்பும் இருக்கிறது. அடிக்கடி பல்வேறு நாடுகளுக்கு செல்பவர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும். அதேவேளை, எந்தெந்த நாடுகளில் இந்த போன் மூலம் ரோமிங் வசதியை பெற முடியும் என்பது பற்றிய விபரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

வரும் 31ந் தேதி அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் இந்த போனை ஆன்லைனில் வரும் 28ந் தேதி முதல் புக்கிங் செய்துகொள்ள முடியும். இந்த போனுக்கு அமெரிக்காவில் $199.99 (ரூ.8,900) விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆசிய சந்தையில் ஃபோட்டான் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து இதுவரை மோட்டோரோலா தகவல்களை எதையும் வெளியிடவில்லை.

இந்த போன் ஸ்பிரின்ட் தொலைதொடர்பு நிறுவனத்தின் மூலம் இரண்டு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...