onlne

Saturday, July 30, 2011

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி ஆட்டோகிராப் போட்ட மொபைலின் விலை 2,222 மட்டுமே.டோனி ரசிகர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பு மாக்ஸ் மொபைல் வெளியிட்டது



 இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணியின் ஆட்டோகிராபுடன் புதிய டியூவல் சிம் கார்டு மொபைல்போனை மேக்ஸ் மொபைல்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

மேக்ஸ் மொபைல்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.டோணி செயல்பட்டு வருகிறார். அந்த நிறுவனத்தின் மொபைல்போன்களை பிரபலப்படுத்துவதில் டோணி முக்கிய பங்கு வகிக்கிறார்.

இந்த நிலையி, டோணியின் இன்ஷியலை கொண்ட குறியீட்டு பெயரில் புதிய போனை மேக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. டோணியின் இனிஷியலையும், அவர் கிரிக்கெட் விளையாடும்போது அணியும் டீஷர்ட்டில் உள்ள 7ம் எண்ணையும் சேர்த்து எம்எஸ்டி-7 என்ற குறியீட்டு பெயருடன் இந்த போன் வந்துள்ளது.

2.2 இஞ்ச் திரை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போனின் பின்புறத்தில் டோணியின் ஆட்டோகிராப் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், 1.3 கேமரா பொருத்தப்பட்டுள்ள இந்த போனில் ப்ளாஷ், ஜும் உள்ளிட்ட கூடுதல் அம்சங்கள் எதுவும் இந்த கேமராவில் இல்லை.

3ஜி நெட்வொர்க்கில் இயங்கும் இந்த போன் 2ஜி நெட்வொர்க்கில் இயங்காது. ரெக்கார்டி வசதியுடன் கூடிய எப்எம் ரேடியோ மற்றும் டார்ச் லைட் வசதி உள்ளது.

ஜிபிஆர்எஸ், வாப் தொழில்நுட்ப இணைப்பு வசதிகளை கொண்டுள்ள இந்த போனில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குள் எளிதாக செல்ல முடியும். ஆனால், எட்ஜ் இணைப்பு வசதி கிடையாது.

128எம்பி சேமிப்பு திறனுடன் வந்துள்ள இந்த போனின் சேமிப்பு திறனை 32 ஜிபி வரை கூட்டிக்கொள்ளலாம்.

எம்பி-3, ஏஏசி, டபிள்யூஏவி, ஏஎம்ஆர் பார்மெட்டுகளில் ஆடியோ பைல்களையும், எப்எல்வி, 3ஜிபிபி, ஏவிஐ, எம்பி-4 பார்மெட்டுகளில் வீடியோ பைல்களை இயக்குகிறது.

தொல்லைதரும் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்புகளை பிளாக் லிஸ்ட் மூலம் தவிர்க்க முடிகிறது. யமஹா ஆம்பிளிபயர் கொண்ட ஆடியோ துல்லியமான ஒலியை வழங்குகிறது.

300 மணிநேர ஸ்டான்ட்-பை மோடு மற்றும் 4 மணிநேர டாக்டைம் கொண்ட 1,000 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
கறுப்பு, கறுப்பு+மஞ்சள், கறுப்பு+பச்சை மற்றும் கறுப்பு + ஆரஞ்ச் ஆகிய இரட்டை வண்ணங்களில் இந்த போனை தேர்வு செய்துகொள்ளலாம். 

இது ரூ.2,222 விலையில் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்களை சுண்டிஇழுக்கும் வகையில் குறைந்த விலையில், இந்த போனை மேக்ஸ் அறிமுகம் செய்துள்ளது.




No comments:

Post a Comment

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...