onlne

Sunday, August 21, 2011

புதிய ஹைடெபினிஷன் மொபைல்போன்கள் - சாம்சங் அறிமுகப்படுத்துகிறது



எச்டி போன்களுக்கு இனி தட்டுப்பாடு இருக்காது. ஏனெனில், சாம்சங் நிறுவனம் எச்டி டிஸ்பிளேயுடன் கூடிய மொபைல் போன்களை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதன் தொடக்கமாக முதலில் அது ஆமோலெட் டிஸ்பிளையுடன் கூடிய 3 மொபைல்களை அரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக, இத்தாலியின் டெலிபோனியோ இணையதளத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சாம்சங் அடுத்த ஆண்டு 6 ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதோடு கூட உயர்ந்த தரத்தில் புதிய இரண்டு ஸ்மார்ட்போன்களையும் அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதில் ஒன்று விண்டோஸ் போன் 7.5 மாங்கோவையும் மற்றொன்று பாடா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும் கொண்டிருக்கும்.




முதலில் சாம்சங் ஜிடி-5360 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது. அந்த போன் 2எம்பி கேமராவுடன், 3 இன்ச் அளவுள்ள டிஸ்பிளேயுடன் 240 X 320 ரிசலூஷன் கொண்ட திரையைக் கொண்டிருக்கும். 



மேலும், இது ஆண்ட்ராய்டு 2.3.3 ஜிஞ்சர்ப்ரீட் ஓஎஸ்ஸை பெற்றிருக்கும். அதே நேரத்தில் சாம்சங் ஜிடி-ஐ8150 என்ற புதிய போனையும் அறிமுகப்படுத்தவிருக்கிறது. இது 16ஜிபி மெமரியையும் 480 X 800 பிக்ஸல் ரிசலூஷன் கொண்ட திரையையும் பெற்றுள்ளது. மேலும் இது அதிவிரைவான 1.4 ப்ராஸஸர், 4 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் 5 எம்பி கொண்ட 720பி ஹச்டி வீடியோ ரிக்கார்டிங்கையும் பெற்றிருக்கிறது.



சாம்சங்கின் கேலக்ஸி வரிசை போன்கள் சர்வதேச சந்தையில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதை தக்கவைக்க சாம்சங் புதிய வசதிகளுடன்கூடிய பல போன்களை புதிது புதிதாக அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. தவிர, வரும் காலங்களில் ஆண்ட்ராய்டு போன்களையும் அறிமுகப்படுத்தவிருக்கிறது. இப்பொழுது 1280 X 720 எச்டி ரிசலூஷனுடைய திரை கொண்ட போன்களை அது அறிமுகப்படுத்துவதால் உண்மையில் அது ஒரு கடும் போட்டியாக இருக்கும்.



சாம்சங்கின் அடுத்த கேலக்ஸி வரிசை ஜிடி-ஐ19220 போன் உண்மையிலேயே வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களை பெற்றிருக்கும். அதனுடைய சூப்பர் ஆமோலெட் டிஸ்பிளே (1280 X 720) சிறந்த செயல்திறத்துடன் இருக்கும். அதேபோல் நாம் ஆண்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சாண்ட்விச் ஓஎஸ் அதில் இருக்கும் என நம்பலாம். அதன் டிவைஸ் கூகுள் நெக்சஸ் ப்ரைமாகக் கூட இருக்கலாம். பொறுSத்திருந்து பார்ப்போம். கண்டிப்பாக சாம்சங் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாது.




No comments:

Post a Comment

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...