onlne

Sunday, August 14, 2011

5 மெகாபிக்ஸல் கேமராவுடன் வரும் எச்டிசி மஸா

எச்டிசி அறிமுகப்படுத்தவிருக்கும் மஸாவைப் பற்றி ஏராளமான தகவல்கள் வருகின்றன. அது வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் வகையில் ஏராளமான அம்சங்களை கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது உயர்ரகத்தை சேர்ந்த சிடிஎம்ஏ மற்றும் ஜிஎஸ்எம் நெட்வொர்க்கில் கலப்பின (ஹைபிரிட்) மொபைலாக இருக்கும் என்று தெரிகிறது.

மஸா 3.8 இன்ச் அளவில் டிஎஃப்டி தொடுதிரை கொண்டு 480 x 800 பிக்ஸல் டிஸ்பிளேவுடன் மிக கவர்ச்சியாக இருக்கிறது. தொடுதிரை மல்டி டச் வசதி கொண்டதாகும். இதன்மூலம் படங்களை திருப்ப முடியும் சுழற்ற முடியும் மற்றும் பெரிதாக மற்றும் சிறிதாக காட்டும் தொழில்நுட்பத்தை பெற்றுள்ளது. மேலும்

தொடுதிரை லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் கொண்டு துல்லியமான தெளிவை தருகிறது. இதில், எல்இடி ப்ளாஷ் மற்றும் ஆட்டோ ஃபோக்கஸ் வசதிகள் மற்றும் வீடியோ ரிக்கார்டிங் வசதி கொண்ட 5 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. அதனால் தெளிவான படங்களை எடுக்க முடியும்.

இது சிறப்பான தொடர்பு வசதிகளையும் கொண்டுள்ளது. குறிப்பாக விரைவான தகவல் பரிமாற்றத்திற்கான 2.1 ப்ளூடூத் வசதி மற்றும் வயர்லஸ் தொடர்புக்கு வைபை வசதியையும் வழங்குகிறது. அதனால் எவ்வளவு பெரிய வீடியோ, ஆடியோ பைலாக இருந்தாலும் மிக விரைவாக மற்ற டிவைஸ்களுக்கு மாற்ற முடியும்.

பிசி மற்றும் லாப்டாப்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய யுஎஸ்பி வசதியையும் வழங்குகிறது. மேலும் மஸா 3ஜி வசதியையும் கொடுக்கிறது. பொழுதுபோக்கு அம்சங்களுக்கான எம்பி3, டபுள்யுஎம்எ, எம்4அ மற்றும் எம்4பி போன்ற பைல்களை சப்போர்ட் செய்யும் மியூசிக் ப்ளேயரையும் கொண்டுள்ளது.

இதில் வீடியோ விளையாட்டுக்களை விளையாடினால் சிறந்த அனுபவத்தைப் பெறலாம். மஸா சிறந்த செயல்திறன் கொண்ட ப்ராஸஸருடன் கூடிய விண்டோஸ் மெபைல் 7 ஆபரேட்டிங் சிஸ்டத்தை கொண்டுள்ளது. மேலும், நவீன ஜிஎஸ்பி வசதியையும் பெறலாம். ரூ. 15,000 விலையில் மஸா அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.






No comments:

Post a Comment

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...